Interesting Facts About Sea Cows : கடல் பசுக்கள் பற்றிய சில சுவாரசிய தகவல்கள்

கடலில் வாழும் பல்வேறு உயிரினங்களைப் பற்றி  அறிந்து கொண்ட அளவுக்கு கடல் பசுக்களை பற்றி அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. கண்களில் காண கிடைக்காத, பார்க்க முடியாத பல்வேறு அற்புதமான உயிரினங்களுடன் கடலில் வாழும் ஒரு உயிரினம் தான் கடல் பசு. இந்நிலையில் இவற்றை பற்றிய (Interesting Facts About Sea Cows) சில சுவாரசியமான தகவல்களை காணலாம்.

கடல் பசுக்கள் பற்றிய சில உண்மைகள் (Interesting Facts About Sea Cows)

நிலத்தில் காணப்படும் பசுக்களை போன்ற முக அம்சங்களுடன் இவை காணப்படும். இவை கடற் புற்களை உணவாக உண்டு வாழ்வதால் இவற்றிற்கு கடல் பசு என்று (Interesting Facts About Sea Cows) பெயர் ஏற்பட்டது. ஆங்கிலத்தில் அவை டுகாங் என்று அழைக்கப்படுகின்றன. இந்த விலங்கு அந்தமான் நிக்கோபார் மாநில விலங்காக உள்ளது.

கடல்பசுக்களின் வாழ்விடம்

கடல்புற்கள் நிறைந்த பகுதிகள், கடல் நீரோட்டங்களால் உருவாகும் சறுக்கல் காடுகளின் ஆழமற்ற நீர்ப் பகுதிகள், தீவுகளை ஒட்டிய பகுதிகள் என அவை வெவ்வேறு வாழ்விடங்களைக் கொண்டுள்ளன. கடல் பசுக்கள் (Interesting Facts About Sea Cows) மட்டுமே  பாலூட்டிகளில் தனித்து நிற்கின்றன மற்றும் எண்ணிக்கையில் நெருக்கமாக உள்ளன. வெப்பமண்டல இந்தோ-பசிபிக் பகுதியில் அமைந்துள்ள ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், மடகாஸ்கர், இலங்கை மற்றும் இந்தியா போன்ற 30க்கும் மேற்பட்ட நாடுகளின் குறிப்பிட்ட கடல் பகுதிகளில் கடல் பசுக்கள் காணப்படுகின்றன.

மெதுவாக நீந்த கூடியவை

கடல் பசுவுக்கு குறைந்த பார்வை இருப்பதால் ஒலி எழுப்புதல் மற்றும் தொடுதல் மூலம் தொடர்பு கொள்கின்றன. மெதுவாக நீந்தும் தன்மை கொண்டது. இது ஒரு நாளைக்கு சுமார் 40-50 கிலோ கடற்புற்களை (Interesting Facts About Sea Cows) உணவாக சாப்பிடுகிறது. மணிக்கு 10-15 கி.மீ. வேகத்தில் நீந்தக் கூடியது. கடற்பசுக்கள் பொதுவாக கடலின் மேற்பரப்பில் நீந்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அதிக ஞாபக சக்தி கொண்டவை

கடல் பசுக்களின் மூளையின் எடை மொத்த உடல் எடையில் 0.1% இருந்தாலும், அவை அதிக நினைவாற்றல் மற்றும் புத்திசாலித்தனம் கொண்டவை. குறிப்பிட்ட பகுதியை விட்டு வேறு பகுதிக்கு சென்றாலும் வந்த வழியை சரியாக நினைவில் வைத்து மீண்டும் அதே இடத்திற்கு வந்து விடுகின்றன.

Latest Slideshows

Leave a Reply