Interesting Facts About Swan : அன்னப்பறவை பற்றிய சுவாரசியமான தகவல்கள்

அன்னம் போல வாழ வேண்டும் என்பது பொதுவான அறிவுரை. பல சந்தர்ப்பங்களில் நாம் கேட்டிருக்கலாம் அல்லது சொல்லப்பட்டிருக்கலாம். அன்னத்தின் வாழ்க்கை இவ்வளவு சிறப்பு வாய்ந்தது. தண்ணீரில் வாழ்ந்தாலும் அதன் இறகுகளில் ஒரு சொட்டு நீர் கூட ஒட்டாது. பாலும் தண்ணீரும் கலந்தாலும் அன்னம் பாலை பிரித்து தனித்தனியாக குடிக்கும். தண்ணீரின் அழுக்கில் வாழ்ந்தாலும், தான் உண்பதையும் குடிப்பதையும் சுத்தம் செய்து உண்ணும் பண்பு பெற்றுள்ளது. அன்னம் பற்றி நாம் அறிந்த பொதுவான அம்சங்கள் (Interesting Facts About Swan) தற்போது காணலாம்.

Interesting Facts About Swan - அன்னப்பறவைப் பற்றிய சில தகவல்கள் :

அன்னம் உண்மையில் இருக்கிறதா? அல்லது கற்பனையின் உருவமா? அன்னம் பற்றிய கூற்றுகள் நம்பக்கூடியதா? என அன்னம் பற்றி பல கேள்விகள் உள்ளன. அன்னம் குறித்த தேடல்களின் போது, ​​ராமாயணம், மகாபாரதம் மற்றும் வேதங்களில் இந்த பறவையின் குறிப்புகள் (Interesting Facts About Swan) உள்ளன. சமஸ்கிருதத்தில் இது ‘ஹம்சம்’ அல்லது ‘ஹம்சபட்சி’ என்று அழைக்கப்படுகிறது. திருக்கோணேஸ்வரநாதரின் அம்மன் பெயர் ‘ஹம்ஸவனாம்பிகை’. அன்னம் போல அழகுடையவள், அன்ன நடையாள் என்பன, கவிஞர்களின் அழகியல் வர்ணனையில் வரும் வரிகள். கோயில் சிற்பங்களிலும், ஓவியங்களிலும் அன்னத்தின் வடிவத்தைக் காணலாம். வீடுகளிலும் பெண்களின் புடவைகளிலும் உள்ள சரஸ்வதி படங்களிலும் அன்னத்தின் வடிவத்தை சித்திரமாக காணலாம்.

இமயமலையில் உள்ள மானசரஸ் ஏரியில் அன்னம் வாழ்ந்ததாக இந்திய புராணங்கள் கூறுகின்றன. மகாபாரதத்தில் நள தமயந்தியின் கதையில், நளனுக்கும் தமயந்திக்கும் ஒரு தூதுப் பறவையாக இருந்திருக்கிறது. இரவி வர்மாவின் நளதமயந்தி ஓவியத்தில் அன்னம் முதன்மையானது. பாலையும், தண்ணீரையும் கலந்து வைத்தால் பாலை மட்டும் தனியாக எடுக்கும் சக்தி அன்னத்திற்கு உண்டு. அன்னம், குள்ள வாத்து, நாரை போன்ற பறவைகள் ஒரே இனத்தைச் சேர்ந்தவை. வாத்து போன்ற பறவைகளின் வாயில் சல்லடை போன்ற அமைப்பு இருக்கும் என்பது விலங்கியல் அறிஞர்கள் அறிந்த உண்மை. அதனால் வாத்துகள் தங்களுக்குத் தேவையான தண்ணீரையும், புழுக்களையும், சகதியை ஒதுக்கித் தின்றுவிடும்.

இந்த விலங்கியல் கண்டுபிடிப்பை பிரதிபலிக்கும் வகையில் நமது முன்னோர்கள் இந்த பால்/நீர் கதையை சொல்லியிருக்கலாம் அல்லது அழிந்துபோன, நமக்குத் தெரியாத அன்னப்பறவையின் மற்றொரு இனத்தைப் பற்றியதாக இருக்கலாம் என்கிறார். புராண காலங்களில், தூய்மையானவற்றை அழுக்கிலிருந்து பிரிக்கும் பறவையாக அன்னங்கள் கருதப்பட்டது. அன்னங்கள் தூய முத்துக்களை உணவாக உண்கின்றன. தண்ணீரில் கூட அன்னத்தின் சிறகுகள் நனையாது. இவ்வுலக வாழ்வின் மீது பற்று இல்லாததற்கு இந்த அன்னங்கள் ஒரு உதாரணம் என்று கூறப்படுகிறது. அன்னப் பறவையைப் போல வாத்து இறக்கைகள் கூட தண்ணீரில் ஒட்டாது. சேற்று நீரில் இருந்து சேற்றை பிரித்து சுத்தமான தண்ணீரை குடிக்கும் திறனை வாத்துகளும் பெற்றுள்ளன.

Latest Slideshows

Leave a Reply