Interesting Facts About Turkey : வான்கோழி பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்
பெரும்பாலும் வட அமெரிக்காவில் காணப்படும் வான்கோழி இன்று உலகம் முழுவதும் வளர்க்கப்பட்டு வருகிறது. மேலும் முதன்முதலில் வான்கோழி வட அமெரிக்கா கண்டத்தில் பெரும்பாலும் வாழ்ந்த அசுடெக் மக்களால் சுமார் 2000 ஆண்டுகளுக்கு (Interesting Facts About Turkey) முன்பு வளர்க்கப்பட்டது. பின்னர் ஐரோப்பியர்கள் வான்கோழியை உலகின் பல பகுதிகளுக்கு கொண்டு சென்று வளர்த்தனர். மேலும் வான்கோழியின் சுவையான இறைச்சி, முட்டையால் வணிக நோக்கத்திற்காக இது உலகளாவிய முக்கியத்துவம் பெற்றுள்ளது.
வான்கோழி உடல் அமைப்பு
வான்கோழியின் தலைப்பகுதியில் சிவப்பு நிற தோல் மற்றும் சுருங்கிய இறைச்சி பகுதி காணப்படுகிறது. மேலும் இரண்டு பெரிய கண்களை கொண்ட வான்கோழி 270° வரை பார்க்கும் திறன் கொண்ட பறவையாகும். ஆண் வான்கோழிக்கு வண்ணமயமான இறகுகளும், பெண் வான்கோழியின் இறகுகள் பழுப்பு நிறத்தில் இருக்கும். மேலும் ஆண் வான்கோழியின் கால்களில் ‘Spur’ எனப்படும் கூர்மையான கொம்பு இருப்பதால் குறுகிய நேரத்தில் வேகமாக பறக்க முடியும்.
வான்கோழியின் ஒலி
ஆண் வான்கோழி கொபுள் கொபுள் (Gobble Gobble) என்ற ஒலி எழுப்புகிறது. இது பெரும்பாலும் இனப்பெருக்க காலத்தில் பெண் வான்கோழியை ஈர்க்க பயன்படுத்தப்படுகிறது. மேலும் ஆண் வான்கோழியின் குரல் ஒலி சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு கேட்கும் அளவுக்கு வலிமையானதாக இருக்கும். மேலும் பெண் வான்கோழி ஆண் கோழியை போல பெரிய சத்தம் எழுப்பாமல், அது ‘Cluck’ போன்ற மென்மையான ஒலிகளை உண்டாக்கி தன் குஞ்சுகளுடன் தொடர்பு கொள்ளும்.
வான்கோழியின் வகைகள் (Interesting Facts About Turkey)
வான்கோழிகள் பொதுவாக இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன, ஒன்று காட்டு வான்கோழி மற்றும் வீட்டு/வளர்ப்பு வான்கோழி. இதில் காட்டு வான்கோழி வட அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. இதன் இறகுகள் மிகுந்த அடர்த்தியாகவும், பழுப்பு மற்றும் பச்சை நிற கலவையிலும் இருக்கும். வளர்ப்பு வான்கோழியை உலகம் முழுவதும் பண்ணைகளில் இறைச்சி உற்பத்திக்காக அதிகமாக வளர்க்கப்படுகின்றன.
உணவு பழக்கவழக்கம்
வான்கோழிகள் மக்காச்சோளம், கோதுமை, சிறிய பூச்சிகள், புல், பழங்கள், எறும்புகள், புழுக்கள், தவளைகள் போன்றவற்றை உண்ணும். மேலும் இயற்கையில் உள்ள முளைகள் மற்றும் காய்கறி இலைகள் கூட முக்கியமான உணவாகும்.
வான்கோழி பற்றிய சுவாரசிய தகவல்கள்
வான்கோழியால் 20 மைல் வேகத்தில் ஓடவும், 55 மைல் வேகத்தில் பறக்கவும் முடியும். மேலும் இவற்றின் பார்வை திறன் மிகவும் (Interesting Facts About Turkey) கூர்மையானது. இத்தனை சிறப்புக்கள் கொண்ட வான்கோழியை பெஞ்சமின் பிராங்க்ளின் அமெரிக்காவின் தேசிய பறவையாக அறிவிக்க முயற்சி செய்தார். ஆனால் அதற்கு பதிலாக கழுகு தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஆரோக்கிய நன்மைகள்
வான்கோழியின் இறைச்சி உயர் புரதச்சத்து கொண்டது. இதில் வைட்டமின் பி6, நியாசின், செலீனியம் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது. மேலும் இதில் கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு வான்கோழி சிறந்த உணவாகும்.
Latest Slideshows
-
Yoga Benefits : யோகா செய்வதால் உடலில் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்..!
-
International Film Festival 2025 : 23-வது சர்வதேச திரைப்பட விழா சென்னையில் டிச 11-ல் தொடக்கம்..!
-
Madras High Court Recruitment : சென்னை உயர் நீதிமன்றத்தில் 50 ஆயிரம் சம்பளத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்?
-
Carrom World Cup 2025 : கேரம் உலகக் கோப்பை.. 3 தங்கம் வென்ற சென்னை காசிமேடு கீர்த்தனா.!
-
IndiGo Flight Cancellations : இண்டிகோ முடக்கம் தாக்கம் - ‘கல்லா’ கட்டிய மற்ற விமான நிறுவனங்கள்..!
-
Virat Kohli Latest Record : இந்தியா Vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டி- சோதனையிலும் விராட் செய்த மிகப்பெரிய சாதனை
-
Redmi 15C 5G Smartphone Price : பட்ஜெட் விலையில் ரெட்மி 15C ஸ்மார்ட்போன் அறிமுகம் : சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
-
The Architect's Dream Book Review : எழுத்தாளர் நிகில் குமாரின் முதல் நாவல் "தி ஆர்கிடெக்ட்ஸ் ட்ரீம்"
-
Real Estate Market Growth : ரியல் எஸ்டேட் சந்தை 4 ஆண்டுகளில் ரூ.10.8 லட்சம் கோடியாக வளரும்
-
Tere Ishk Mein Movie Review : அழுத்தமான காதல் கதையாக ஈர்க்கிறதா?