Interesting Facts About Wolves : ஓநாய்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்

ஓநாய்கள் ஒரு வகையான பாலூட்டி மற்றும் நரிகளை உள்ளடக்கிய குடும்பத்தின் இனமாகும். ஓநாய்கள் பெரும்பாலும் ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் காணப்படுகின்றன. இவை பொதுவாக புல்வெளிகள், காடுகள், மலைப்பகுதிகள், பாலைவனங்கள் போன்ற பகுதிகளில் வாழ்கின்றன. ஓநாய்கள் பற்றி பல விஷயங்கள் இருப்பினும் இந்த பதிவில் ஓநாய்களை (Interesting Facts About Wolves) பற்றி சில சுவாரசியமான தகவல்களை பார்க்கலாம்.

Interesting Facts About Wolves

உடல் அமைப்பு

ஓநாய்கள் வீட்டு விலங்கான நாயை விட சற்று உருவத்தில் பெரியதாக இருக்கும். சராசரியாக ஓநாய்கள் சுமார் 35 முதல் 50 கிலோ எடை இருக்கும். மேலும் 75 செ.மீ உயரமும், முன் பாதங்களில் 5 விரல்களும், பின் பாதங்களில் 4 விரல்களும் கொண்ட உடலமைப்புடன் காணப்படும்.

ஓநாய்களின் வகைகள்

உலகளவில் மூன்று வகையான ஓநாய் இனங்கள் காணப்படுகின்றன. அவை சிவப்பு ஓநாய், சாம்பல் நிற ஓநாய், கிழக்கு ஓநாய் என வகைப்படுத்தப்படுகிறது. இதில் சாம்பல் நிற ஓநாயும், சிவப்பு நிற ஓநாய் இனம் மட்டுமே உயிருடன் இருக்கின்றன. கிழக்கு ஓநாய் இனங்கள் முற்றிலும் அழிந்துவிட்டது.

ஓநாய்களின் உணவுமுறை

ஓநாய்களின் வாசனை உணர்வு, கேட்கும் திறன் ஆகியவற்றின் மூலம் தனக்கு தேவையான இரையை கண்டுபிடித்து வேட்டையாடி உண்கின்றன. ஓநாய்கள் பெரும்பாலும் காட்டெருமை, மான், எருதுகள், கரிபூ போன்ற விலங்குகளையும் பாலூட்டிகளான முயல், பீவர்ஸ், கொறித்துண்ணிகள் போன்ற (Interesting Facts About Wolves) விலங்குகளையும் வேட்டையாடி சாப்பிடுகின்றன. மேலும் ஓநாய்கள் எப்போதும் இறந்த விலங்குகளை உண்ணாது.

ஓநாய்களின் பண்புகள்

விலங்குகளில் பெற்றோரை மதித்து நடக்கும் பிள்ளை என்ற பட்டம் ஓநாய்களுக்கு மட்டுமே உள்ளது. ஓநாய்களின் பெற்றோர்களினால் வேட்டையாட முடியாத நிலை வரும்போது ஓநாய்களின் பிள்ளைகள் (Interesting Facts About Wolves) தங்களின் பெற்றோரை குகையில் வைத்து கடைசிக்காலத்தில் நல்ல முறையில் பராமரிக்கும் பண்புடைய விலங்காகும்.

ஓநாய்களின் ஆயுட்கலாம்

ஓநாய்கள் சிங்கம், புலி, சிறுத்தை போன்ற விலங்குகளால் வேட்டையாடப்படாமல் இருந்தால் 8 முதல் 12 ஆண்டுகள் வரை ஓநாய்கள் உயிர் வாழும் என வனவிலங்கு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Latest Slideshows

Leave a Reply