The Interior Rotates Slower Than Exterior Of Earth : பூமியின் வெளிப்புறத்தைவிட மெதுவாக சுழலும் உட்புறம்

பூமியின் உள் மையமானது கிரகத்தின் மேற்பரப்பை விட மெதுவாக சுழல்வதாக புதிய அறிவியல் கண்டுபிடிப்பு ஒன்று உறுதி (The Interior Rotates Slower Than Exterior Of Earth) செய்யப்பட்டுள்ளது. தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் (யுஎஸ்சி) விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், பூமியின் உள் மையமானது கிரகத்தின் மேற்பரப்பை விட மெதுவாகச் சுழல்கிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த கண்டுபிடிப்பு கிரக இயக்கவியல் பற்றிய முக்கியமான விவாதங்களைத் தூண்டியுள்ளது. இது பூமியின் காந்தப்புலத்தின் நிலைத்தன்மை, பகல் மற்றும் இரவின் மாற்றம் மற்றும் நாட்கள் நகரும் வேகம் உள்ளிட்ட பல விஷயங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The Interior Rotates Slower Than Exterior Of Earth - மெதுவாக சுழலும் உள்வட்டம் :

நேச்சரில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, 2010-ம் ஆண்டு பூமியின் உள் மையமானது அதன் வேகத்தை குறைக்கத் தொடங்கியது (The Interior Rotates Slower Than Exterior Of Earth) என்று கூறப்பட்டுள்ளது. அந்த வேகம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தற்போது மேல்மட்டத்தின் வேகத்தைவிட குறைவாகிவிட்டது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் முதன்முறையாக பூமியின் மேல் மட்டத்தை விட மெதுவாக நகர்கிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், உட்புற மையமானது அதிக வெப்பநிலை, அதிக அடர்த்தி கொண்ட இரும்பு மற்றும் நிக்கல் ஆகியவற்றால் ஆனது. 

ஆய்வுகள் :

ஆராய்ச்சியாளர் ஜான் விடல் மற்றும் சில ஆராய்ச்சியாளர்கள் இந்த கண்டுபிடிப்பை செய்துள்ளனர். தெற்கு அட்லாண்டிக்கில் உள்ள தெற்கு சாண்ட்விச் தீவுகளைச் சுற்றி 1991 மற்றும் 2023-க்கு இடையில் பதிவு செய்யப்பட்ட 121 தொடர்ச்சியான பூகம்பங்களை அவர்கள் ஆய்வு செய்தனர். 1971 மற்றும் 1974-க்கு இடையில் நடத்தப்பட்ட சோவியத் அணுசக்தி சோதனைகளின் முடிவுகள் மற்றும் மையத்தின் பிற உள் ஆய்வுகள் பிரெஞ்சு மற்றும் அமெரிக்க அணுசக்தி சோதனைகளின் தரவுகளையும் ஆய்வு செய்துள்ளன. இந்த ஆய்வுகளின் அடிப்படையில் பூமியின் மைய வேகம் குறைய ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமாக, உள் மையமானது பல தசாப்தங்களில் முதல் முறையாக குறைந்துள்ளது. மற்ற விஞ்ஞானிகளும் சமீபத்தில் இதே போன்ற ஆய்வுகளை மேற்கொண்டனர். அவர்களின் ஆய்வுகளிலும் இதே போன்ற முடிவுகள் கிடைத்தன.

சுழற்சி வேகம் குறைவு :

உட்புற மையத்தின் சுழற்சியின் வேகம் குறைவது சுற்றியுள்ள திரவ வெளிப்புற மையத்தின் இயக்கத்தால் தான் என்று கூறப்படுகிறது. திரவ வெளிப்புற மையமானது உராய்வை ஏற்படுத்துகிறது மற்றும் உள் மையத்தின் சுழற்சி வேகத்தை குறைக்கிறது. இது பூமியின் காந்தப்புலத்தை பாதிக்கிறது. மேலும் பாறை மேலோட்டத்தில் உள்ள அடர்ந்த பகுதிகள் கடுமையான உராய்வை ஏற்படுத்துகின்றன. இதுதான் உள் மையத்தின் சுழற்சியின் வேகம் குறைய காரணமாக மாறியுள்ளதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஆண்டுகளில் முதன்முறையாக பூமியின் மேற்பரப்பை விட மெதுவாக நகர்கிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இனிமேல் இரவும் பகலும் அதிகரிக்கலாம். நாட்களில் நேரம் நீடிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக 24 மணி நேரம் ஒரு நாளுக்கு என்பது இல்லாமல், நாளின் அளவு நீடிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

Latest Slideshows

Leave a Reply