International Day Of Disabled Persons 2023 : ஸ்டாலின் நலத்திட்ட நிதியை உயர்த்தி பெருமிதம்

International Day Of Disabled Persons 2023 :

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் (International Day Of Disabled Persons 2023) ஆனது ஒவ்வொரு ஆண்டும்  டிசம்பர் மாதம், 3ஆம் நாள் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் அனுசரிக்கப்படுகின்றது. நாம் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாத்து, அவர்கள் சுயமரியாதையுடன் சமுதாயத்தில் இணைந்து வாழ ஒத்துழைப்பு நல்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த நாள் (International Day Of Disabled Persons 2023) ஆனது உலகலவில்அனுசரிக்கப்படுகிறது.

நாளை முதலமைச்சர் ஸ்டாலின் உலக மாற்றுத்திறனாளிகள் நாளையொட்டி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், மாற்றுத்திறனாளிகளின் சமூக, பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆனது திமுக ஆட்சியில் உறுதி செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் இது தொடர்பாக விடுத்துள்ள வாழ்த்துப் பதிவு வருமாறு; சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் மாதம், 3ஆம் நாள் அனைத்து நாடுகளிலும் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் சுயமரியாதையுடன் சமுதாயத்தில் இணைந்து வாழ ஒத்துழைப்பு நல்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்நாள் (International Day Of Disabled Persons 2023) அனுசரிக்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை நமது அரசு மேற்கொண்டு வருகிறது. முதல் நடவடிக்கையாக இந்த மாற்றுத்திறனாளிகளின் உடல் ரீதியான குறைபாடுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுக்கவும், சிறப்புக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கவும், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக செயல்படுத்தப்படும் பிற நலத்திட்டங்களுக்காகவும் வழங்கப்பட்டு வரும் நிதியினை இந்த அரசு உயர்த்திக் கொண்டே வருகிறது. மாற்றுத்திறனாளிகளின் சமூக, பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு இதன்மூலம் உறுதி செய்யப்படுகிறது. ரூ.2000/- என மாத பராமரிப்பு உதவித்தொகை உயர்த்தி வழங்கியும், மறுவாழ்வு இல்லங்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வாயிலாக அமைக்கும் பல புதிய முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கான பாதுகாப்பு ஆனது உறுதி செய்யப்படுகின்றன. சமுதாயத்தில் மாற்றுத்திறனாளிகள் பொதுக் கட்டடங்களில் முழு பங்கு வகிக்கும் வகையில் தடையற்ற சூழல் அமைத்தல் மற்றும் நவீன உதவி உபகரணங்கள் வழங்குதல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

“உரிமைகள் திட்டம்” மூலம் அனைத்து மறுவாழ்வு உதவிகளும் மாற்றுத்திறனாளிகள் விருப்பத்திற்கு ஏற்றவாறு அவர்கள் வசிக்கும் இருப்பிடம் மற்றும் சமுதாயத்திலேயே கிடைக்கும் வகையில் கோட்ட அளவில் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்கும் பணியும் செயல்படுத்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

  • “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்”
  • “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்”
  • “சமுதாயத்தில் ஒருவரும் விடுபடக்கூடாது” (“LEAVE NO ONE BEHIND”)

போன்ற கொள்கைகளை பின்பற்றும் வகையில் நமது தமிழ்நாடு, ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் உறுதி ஏற்றுள்ளது. எனவே, இந்த நாளில் (International Day Of Disabled Persons 2023) “நிலையான நீடித்த இலக்குகளை மாற்றுத்திறனாளிகள்  அடைந்திடவும்  மற்றும் அவர்களின் நலனை பாதுகாக்கவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்” என உறுதி ஏற்போம்  என்று கூறினார் .

Latest Slideshows

Leave a Reply