International Engineering Procurement Exhibition : சென்னையில் சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சி
International Engineering Procurement Exhibition - சென்னையில் March16 - March18 சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சி :
சென்னை வர்த்தக மையத்தில் சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சி சென்னையில் மார்ச் 16 முதல் 18-ம் தேதி வரை 3 நாட்கள் (International Engineering Procurement Exhibition) நடக்கிறது. இந்த கண்காட்சியில் ‘திறன் தொழில்நுட்பம்’ (#ஸ்மார்ட் இஞ்சினியரிங்) என்ற கருப்பொருளில் 149 தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்படும். இது IEPC இந்தியா சார்பில் நடத்தப்படும் 10-வது சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சி ஆகும். மகாராஷ்டிரா மாநிலம், பாம்பே கண்காட்சி வளாகத்தில் கனடாவை கூட்டு நாடாகக் கொண்டு, 220 கண்காட்சி பங்கேற்பாளர், 350 பேராளர்கள், 6200 பார்வையாளர்களோடு 2012 மார்ச் 22ல், முதல் கண்காட்சி தொடங்கியது. தற்போது 2024-இல் அந்த நிகழ்ச்சி, 9 ஆண்டுகளைக் கடந்து பத்தாம் ஆண்டை நெருங்கியுள்ளது. உலக அளவில் இந்தியாவின் மகத்துவத்தை முன்னிறுத்துவதற்கு இந்தியா இஞ்சினியரிங் சோர்சிங் ஷோ என்ற இந்த தனித்துவமான நிகழ்ச்சி பயன்படுகிறது. இந்த கண்காட்சியை நடத்துவதன் மூலம் உலகெங்கும் இந்தியாவின் மதிப்பை உயர்த்துவதில் IEPC முக்கிய பங்கு வகித்து வருகிறது.
பத்தாம் ஆண்டை எட்டியுள்ள சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சி (IESS-X) ஆனது இந்தியாவின் உலோகம் மற்றும் உலோகம் சார்ந்த பொறியியல் திறன்களை சர்வதேச அரங்குக்கு எடுத்துச் செல்லும் ஒரு சிறந்த கண்காட்சி (International Engineering Procurement Exhibition) ஆகும். இந்த கண்காட்சியில் இந்தியா மற்றும் வெளிநாட்டு அமைச்சகங்கள், தூதரக குழுக்கள், உலகப் புகழ்பெற்ற ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புகள், தொழில்நுட்ப தொழில்முனைவோர்கள், வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள், அறிவியல் அறிஞர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கலந்து பேசி, தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள (International Engineering Procurement Exhibition) இருக்கின்றனர். மேலும், 300 வெளிநாட்டு கொள்முதலாளர்கள், 1300 கண்காட்சி பங்கேற்பாளர்கள் மற்றும் 10 ஆயிரம் வர்த்தக பார்வையாளர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தக் கண்காட்சியில்,
- உலக அளவிலான கொள்முதல் தொடர்பான கருத்தரங்குகள்
- G20 அமர்வுகள்
- 1500 உலகத் தரம்வாய்ந்த பொருட்களின் விலைப்பட்டியல்
- தொழில்நுட்ப கருத்தரங்குகள் நடைபெற உள்ளன.
இந்த சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சி (International Engineering Procurement Exhibition) ஆனது இந்திய மண்ணில் நடைபெறும் மிகப்பெரிய பொறியியல் திருவிழா ஆகும். இதன் முக்கிய அம்சங்கள்,
- 28 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 23 ஆயிரம் வணிக விசாரணைகள் நடைபெற உள்ளன.
- 9 இருதரப்பு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன.
- 46 ஆயிரம் வணிக தொடர்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
சென்னை தேனாம்பேட்டையில் இந்த கண்காட்சி தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பு 29/02/2024-ல் நடைபெற்றது. தமிழக அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை ஆணையர் கிரேஸ் எல்.பச்சாவ், இஇபிசி-யின் தலைவர் அருண்குமார் கரோடியா, பெல்ஜியம் நாட்டின் வர்த்தக ஆணையர் ஜெயந்த் நாடிகர், இஇபிசி தெற்கு மண்டல தலைவர் ராமன் ரகு மற்றும் மண்டல துணைத் தலைவர் ஷாஷி லிவிஸ் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சியில் 300 இந்திய கண்காட்சி பங்கேற்பாளர், 400 பேராளர்கள் ஆகியோரோடு, 700 வணிகர்களுக்கிடையே சந்திப்புகள் ஆனது நடைபெறவுள்ளன. மேலும் 12 அறிவுசார் அமர்வுகளில், 75க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் தங்கள் கருத்துகளை இந்த மூன்று நாட்களில் (மார்ச் 16 முதல் 18-ம் தேதி) சொல்லப் போகிறார்கள். இந்தியாவில் தமிழகம் ஆனது ஏற்றுமதியில் 3-வது இடத்தில் உள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை நிறுவனங்களுக்குப் இந்த கண்காட்சி ஆனது மிகவும் பயனுள்ளதாக அமையும்.
Latest Slideshows
-
A Journey Of Ten Thousand Miles : பத்தாயிரம் மைல் பயணம் புத்தக விமர்சனம்
-
Investigations in Hydrothermal Sulfide Systems in Ocean : கடலின் ஆழத்தில் ஒளிந்திருக்கும் Hydrothermal Sulphide பற்றிய ஆய்வுகள்
-
Intetesting Facts about Chameleons: பச்சோந்திகள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்
-
SP Balasubrahmanyam Road : மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பெயரில் சாலை திறப்பு
-
Valentine's Day 2025 : காதலர் தினம் வரலாறும் & கொண்டாட்டமும்
-
SBI Special Officer Recruitment 2025 : எஸ்பிஐ வங்கியில் 42 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Success Story Of Grand Sweets : கிராண்ட் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் நிறுவனத்தின் வெற்றிக் கதை
-
Thaipusam 2025 : தைப்பூசம் வரலாறும் கொண்டாடும் முறையும்
-
NASA Plans To Two Satellites : சூரியனை ஆய்வு செய்ய ஸ்பெரெக்ஸ் மற்றும் பஞ்ச் என்ற இரு செயற்கைகோளை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது
-
Passion Fruit Benefits In Tamil : பேஷன் பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்