International Hunger Reduction Index : இந்தியா சர்வதேச பட்டினி குறையீட்டு பட்டியலில் 105 ஆவது இடத்தில் உள்ளது.
International Hunger Reduction Index India Ranks 105
சர்வதேச பட்டினி குறியீட்டு பட்டியலில் மிகவும் மோசமான இடத்தில் இந்தியா இருப்பதாக சர்வதேச ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 19-வது உலக பட்டினி குறியீடு 2024-ஐ அயர்லாந்தின் Concern Worldwide மற்றும் ஜெர்மனியின் Weld Hunger Life ஆகிய மனிதநேய அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ளன.
உலக நாடுகளில் உள்ள பசியின் அளவை கண்காணிப்பதற்கான சர்வதேச பட்டினி குறியீடு பட்டியல் (International Hunger Reduction Index) ஆண்டுதோறும் கணக்கிடப்படுகிறது. ஒரு முழுமையான தரவு பகுப்பாய்வு ஆனது சர்வதேச பட்டினி குறியீட்டால் வெளியிடப்பட்ட பட்டியலிலிருந்து செய்யப்படுகின்றது. இந்த பகுப்பாய்வு ஆனது ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகளை வீணாக்குதல், குழந்தை வளர்ச்சி குன்றிய நிலை மற்றும் குழந்தை இறப்பு ஆகிய நான்கு குறிகாட்டிகளின் அடிப்படையில் நடத்தப்பட்டு நாடுகளை வரிசைப்படுத்தப்படுகிறது.
இந்த 2024-ஆம் ஆண்டில் 127 நாடுகள் கொண்ட உலக பட்டினிக் குறியீட்டு பட்டியலில் (International Hunger Reduction Index) இந்தியா 105ஆவது இடத்தில் உள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டில் மிகவும் பின் தங்கிய 111 ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 105ஆவது இடத்தை பெற்றுள்ளது. பங்களாதேஷ் மற்றும் நேபாளம் போன்ற தெற்காசிய நாடுகள் மிதமான பிரிவில் உள்ளன. குறிப்பாக பசி பிரச்னைகள் அதிகம் உள்ள நாடாக ‘தீவிரமான பசி பிரச்னைகள்’ பிரிவில் இந்தியா இடம்பெற்றுள்ளது. 136 நாடுகளில் இந்தியா 27.323 மதிப்பெண்களுடன் தீவிரமான பட்டினி உள்ளதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா ஆனது இலங்கை, நேபாளம், மியான்மர் மற்றும் வங்கதேசத்தை விட பின்தங்கி (International Hunger Reduction Index) உள்ளது. மேலும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு சற்று மேலே இந்தியா உள்ளது. மக்கள் தொகையில் 13.7% பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று முக்கிய புள்ளிவிவரம் வெளிப்படுகிறது.
இதன் அடிப்படையில் 5 சதவிகித ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்கள், 7 சதவிகிதம் பேர் எடை குறைந்தவர்கள், 9 சதவிகித குழந்தைகள் 5 வயது நிறைவடைவதற்கு முன்பே இறந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இன்னும் பட்டினி குறையவில்லை என்பதும் இந்தியாவில் குழந்தைகளிடையே, ஊட்டச்சத்து குறைபாடு பாதிப்பு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்தியாவில் 2000-ம் ஆண்டிலிருந்து குழந்தை இறப்பு விகிதம் குறைந்திருந்தாலும் குழந்தைகளின் வளர்ச்சி குன்றிய நிலையிலேயே இருப்பதாக மேற்கண்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியா உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் சில திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
International Hunger Reduction Index
தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்
இந்த National Food Security Act – சட்டம் ஆனது மூன்றில் இரண்டு பங்கு இந்திய மக்களுக்கு மானிய விலையில் உணவு தானியங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மதிய உணவு திட்டம்
இந்த மதிய உணவு திட்டம் ஆனது பள்ளி செல்லும் குழந்தைகளின் அதிகரிக்கவும் மற்றும் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து அளவை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட திட்டம் ஆகும்.
தேசிய ஊட்டச்சத்து திட்டம்
இந்த உணவு திட்டம் ஆனது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டைக் குறைப்பதில் கவனம் செலுத்துகிறது.
Latest Slideshows
-
OnePlus 13 & 13R Phone Replacement : ஒன்பிளஸ் 13 & 13R போன்களுக்கு ரிப்ளேஸ்மெண்ட் திட்டம்
-
2024-25 GDP Growth Down : 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறையும் என கணிக்கப்பட்டுள்ளது
-
Pongal Festival 2025 : பொங்கல் பண்டிகையின் வரலாறும் & கொண்டாட்டமும்
-
Game Changer Review : கேம் சேஞ்சர் திரைப்படத்தின் திரை விமர்சனம்
-
Retro Release Date Announced : சூர்யா நடிக்கும் ரெட்ரோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
-
Open Secret CEO : அஹானா கௌதமின் வெற்றிப் பயணம்
-
Interesting Facts About Honey Bee : தேனீக்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்
-
Flipkart Monumental Sale 2025 : பிளிப்கார்ட் நிறுவனம் குடியரசு தின சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது
-
V Narayanan Appointed As New ISRO Chief : இஸ்ரோவின் 11-வது தலைவராக தமிழக்தை சேர்ந்த வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்
-
Sandi Keerai Benefits In Tamil : சண்டிக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்