International Masters T20 League : சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் மூலம் ஓய்வுபெற்ற சீனியர் கிரிக்கெட் வீரர்களின் ஆட்டங்களைக் காணலாம்

மார்ச் 16 வரை நடைபெற உள்ள சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் T20 மூலம் ஓய்வுபெற்ற சீனியர் வீரர்களின் (International Masters T20 League) ஆட்டங்களைக் காண முடியும். இந்த சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் T20 தொடரில் மொத்தம் 18 போட்டிகள் நடைபெற உள்ளன. இங்கிலாந்து, இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 6 அணிகள் இந்த தொடரில் மோத உள்ளன. T20 வடிவில் இவை அனைத்தும் நடைபெற உள்ளன. இது ஆறு புகழ்பெற்ற கிரிக்கெட் நாடுகளின் சாம்பியன் வீரர்களை ஒன்றிணைத்து நடத்தப்படவிருக்கும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (IML) தொடர் ஆகும்.

International Masters T20 League தொடரின் கேப்டன்கள் விவரங்கள்

● இங்கிலாந்து – இயோன் மோர்கன்

● இந்தியா – சச்சின் டெண்டுல்கர்

● வெஸ்ட் இண்டீஸ் – பிரையன் லாரா

● இலங்கை – குமார் சங்கக்கரா

● ஆஸ்திரேலியா – ஷேன் வாட்சன்

● தென்னாப்பிரிக்கா – ஜாக் காலீஸ்

கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற இருந்த இந்த சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடர் தற்போது நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

IML T20 தொடர் குறித்து சச்சின் டெண்டுல்கர் உரை

International Masters T20 League - Platform Tamil

சச்சின் டெண்டுல்கர் “நான் எனது முன்னாள் அணி வீரர்கள் மற்றும் சகாக்களுடன் விளையாட இருப்பது எனக்கு உண்மையிலேயே சிறப்பு (International Masters T20 League) வாய்ந்ததாக உள்ளது. இது ஒரு விளையாட்டு வீரராக எனக்கு அளித்த அடையாளத்தை மீண்டும் பெறுவதாக இருக்கிறது. கிரிக்கெட் களத்துக்கு மீண்டும் திரும்புவது மிகவும் சிறப்பு வாய்ந்தது” என தெரிவித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கருடன் இந்திய அணியில் யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, யூசுப் பதான், இர்பான் பதான், ஸ்டூவர்ட் பின்னி, தவால் குல்கர்னி, வினய் குமார், ஷபாஸ் நதீம், ராகுல் சர்மா, நமன் ஓஜா, பவன் நெகி, குர்கீரத் சிங் மான், மற்றும் (International Masters T20 League) அபிமன்யூ மிதுன் விளையாட இருக்கிறார்கள். சச்சின் டெண்டுல்கர் இந்தியாவை வழிநடத்த உள்ளார்.

Latest Slideshows

Leave a Reply