International Shooting World Cup: உலக சாதனை படைத்த இந்திய வீராங்கனை

உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்திய வீராங்கனை ரிதம் சங்வான் 29 ஆண்டு கால சாதனையை முயறியடித்துள்ளார். ரிதம் சங்வான் ஒரு இந்திய துப்பாக்கி சுடும் வீரர் ஆவார். அவர் வழக்கமாக 10 மீ ஏர் பிஸ்டல் மற்றும் 25 மீ பிஸ்டலில் ஆகியவற்றில் போட்டிடுவார். 19 வயது கொண்ட ரிதம் சங்வான் ஜூனியர் மற்றும் சீனியர் மட்டத்தில் துப்பாக்கி சுடுதலில் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஷிப் பதக்கங்களை வென்றுள்ளார்.

துப்பாக்கி சுடுதல் போட்டி (International Shooting World Cup)

சர்வதேச அளவிலான துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு சார்பாக உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி அஜர்பைஜான் நாட்டில் உள்ள பகு நகரில் நடந்து வருகிறது. இதில் ரைஃபிள் மற்றும் பிஸ்டல் ஆகிய இரு பிரிவுகள் நடக்கிறது. இதில் வீரர் மற்றும் வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்திய வீராங்கனையின் சாதனை

நேற்று நடைபெற்ற இளநிலை மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவுக்கான போட்டியில் 19 வயதுடைய இந்திய வீராங்கனை ரிதம் சங்வான் பங்கேற்றுள்ளார். இந்தப் போட்டியில் இவர் தகுதிச் சுற்றில் 595 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இதற்கு முன் பல்கேரியா வீராங்கனையான டயானா லார்கோவா 1994 ஆம் ஆண்டு 594 புள்ளிகள் குவித்ததே உலக சாதனையாக இருந்தது. இதனை தற்போது ரிதம் சங்வான் முறியடித்துள்ளார்.

இதற்கு முன்னதாக 1989 ஆம் ஆண்டு ரஷ்ய வீராங்கனை நினோ சலுக்வத்ஜேவின் 593 புள்ளிகள் குவித்த சாதனையையும் ரிதம் சங்வான் தற்போது முறியடித்துள்ளார். இருப்பினும் தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்த ரிதம் சங்வான் எட்டு பேர் கொண்ட இறுதிப் போட்டியில் கடைசி இடத்தைப் பிடித்ததால் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

Latest Slideshows

Leave a Reply