International Women's Day 2025 : மகளிர் தின வரலாறும் கொண்டாட்டமும்

பெண்களை போற்றும் விதமாகவும், பெண்களின் பிரதிநிதித்துவத்தை மற்றவர்களுக்கு உணர்த்தும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினம் (International Women’s Day 2025)  கொண்டாடப்படுகிறது. மகளிர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? அதனை உருவாக்கியவர் யார்? போன்ற காரணங்களை இந்த பதிவில் பார்க்கலாம். 

18-ம் நூற்றாண்டில் பெண்கள் வீட்டு வேலைகளுக்கு மட்டுமே சரிவருவார்கள் என்று வீட்டில் முடக்கிவைக்கப்பட்டார்கள். 1850-களில் இந்த நிலை மெல்ல மெல்ல மாறி பெண்கள் தொழிற்சாலை, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கால்பதிக்க தொடங்கினர். இந்நிலையில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் பல்வேறு துறைகளில் கால்பதித்தாலும் அவர்களுக்கு உரிமையிலும், ஊதியத்திலும் தொடர்ந்து பாகுபாடு காட்டப்பட்டது. இதனை எதிர்த்து பெண்கள் கடந்த 1910-ம் ஆண்டு டென்மார்க் கோபன்ஹேகனில் மாபெரும் பெண்கள் உரிமை மாநாட்டை (International Women’s Day 2025) நடத்தினர். இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். தங்ககளின் உரிமைகளுக்காக பெண்கள் அனைவரும் கைகோர்த்து ஒற்றுமையாக நின்று போராடினர். இந்த மாநாட்டில் ஜெர்மனியைச் சேர்ந்த புரட்சிப் பெண் கிளாரா ஜெட்கின் அவர்களும் கலந்து கொண்டார். 

பெண்களை ஒருங்கிணைத்து அவர்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவந்த கிளாரா, பெண்களின் உரிமையை பற்றி பேச உலகம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட நாளை பெண்கள் தினமாக கடைபிடிக்க வேண்டும் என்று கருதி தீர்மானம் ஒன்றை (International Women’s Day 2025) நிறைவேற்ற முயற்சி செய்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த தீர்மானம் நிறைவேறவில்லை.

ரஷ்ய புரட்சி

இதற்கு பின் உலக நாடுகளை திரும்பிப்பார்க்க வைக்கும் அளவுக்கு 1917-ல் ரஷ்யாவில் பெண் தொழிலாளர்கள் புரட்சி ஒன்றை முன்னெடுத்தனர். இந்த புரட்சியின் தாக்கத்தால் அப்போது ஆட்சியில் இருந்த ரஷ்ய மன்னர் ஜாரின் ஆட்சியே கவிழ்ந்தது. இதனையடுத்து 1920-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் நடந்த பெண்களின் (International Women’s Day 2025) போராட்டத்தில் ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸாண்டரா கேலன்ரா கலந்து கொண்டார்.

மகளிர் தின வரலாறு (International Women's Day 2025)

International Women's Day 2025 - Platform Tamil

இந்த மாநாட்டில் ரஷ்யாவில் பெண் தொழிலாளர்கள் நடத்திய புரட்சியை நினைவுகூறும் வகையில் புரட்சி நடைபெற்ற  பிப்ரவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையை பெண்கள் தினமாகக் கொண்டாட (International Women’s Day 2025) வேண்டும் என அலெக்ஸாண்டரா கேலன்ரா உட்பட பல பெண்கள் கோரிக்கை வைத்தனர். க்ரிகோரியன் நாட்காட்டியின்படி அவர்கள் கோரிய கடைசி ஞாயிற்றுக்கிழமை மார்ச் 8-ம் தேதியாக இருந்தது. இதனை தொடர்ந்து உலக மகளிர் தினத்தை ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி நடத்த வேண்டும் என்று அலெக்ஸாண்டரா கேலன்ரா பிரகடனம் செய்தார். அந்த ஆண்டு முதல் உலகம் முழுவதும் மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஐநா மகளிர் அமைப்பு

ஐக்கிய நாடுகள் (United Nation) சபை 1975 ஆம் ஆண்டை “சர்வதேச மகளிர் ஆண்டு” என்று அறிவித்து, மார்ச் 8-ம் தேதியை சர்வதேச மகளிர் தினமாக அங்கீகரித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினத்துக்கு ஐநா மகளிர் அமைப்பு ஒரு கருப்பொருளை முன்மொழிகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தின் கருப்பொருள் “அனைவருக்கும் சம உரிமைகள், அதிகாரம் மற்றும் வாய்ப்புகள்” என்பதாகும்.

Latest Slideshows

Leave a Reply