Investment Schemes For Women : பெண்கள் முதலீடு செய்வதற்கான 4 முதலீட்டு திட்டங்கள்

மகளிர் தினம் நாளை மார்ச் 8-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் பெண்களின் பொருளாதார சுதந்திரம் குறித்துப் பேச வேண்டியது அவசியமான ஒன்றாகும். இந்த காலத்தில் பெண்கள் படித்து முன்னேறினாலும், பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் பெரியளவில் இருப்பதில்லை. பொருளாதார சுதந்திரம் அடையப் பெண்கள் எந்த திட்டத்தில் முதலீடு செய்ய (Investment Schemes For Women) வேண்டும், ரிஸ்க் இல்லாமல் எந்தளவுக்கு லாபம் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

Investment Schemes For Women

சுகன்யா சம்ரிதி சேமிப்புத் திட்டம்

ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பெண் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட திட்டம் தான்  சுகன்யா சம்ரிதி சேமிப்புத் (Sukanya Samriddhi Savings Scheme) திட்டமாகும். உங்கள் பெண் குழந்தைக்கு 10 வயது நிறைவடையும் முன் இந்த திட்டத்தில் முதலீடு (Investment Schemes For Women) செய்யவேண்டும். இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 8.2% சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் அதிகபட்சமாக 15 ஆண்டுகள் வரை பலன் பெறலாம். மேலும் இந்தத் திட்டத்திற்கான வட்டி விகிதம் 3 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்பட்டு, அவை நிதியாண்டின் இறுதியில் வரவு வைக்கப்படும்.

மகிளா சம்மான் சேமிப்பு திட்டம்

மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் (Mahila Samman Bachat Patra) பெண்களுக்கான ஆபத்து இல்லாத முதலீட்டுத் திட்டமாகும். இந்த திட்டத்தில் அனைத்து வயது பெண்களும் முதலீடு செய்யலாம். இதில் அதிகபட்சமாக ஒருவர் ரூ.2 லட்சம் வரை முதலீடு (Investment Schemes For Women) செய்யலாம். இதற்கு 7.5% சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் முதலீடு செய்து ஒரு வருடம் முடிந்த பிறகு உங்கள் வைப்புத்தொகையில் இருந்து 40% தொகையை எடுத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Investment Schemes For Women - Platform Tamil

வருங்கால வைப்பு நிதி திட்டம்

தபால் நிலையத்தில் உள்ள பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் (Provident Fund Scheme) சிறந்த நீண்ட கால முதலீட்டுத் திட்டமாகும். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சமாக எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு (Investment Schemes For Women) செய்யலாம். இதற்கான வட்டி விகிதம் 7.1% சதவிகிதம் ஆகும். நீண்ட காலம் முதலீடு செய்ய விரும்பும் பெண்களுக்கு இது ஏற்ற திட்டமாகும்.

தங்கம்

பெண்கள் தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பான திட்டமாகும். இது பெண்களுக்கான சேமிப்பு திட்டம் இல்லை என்றாலும் பெண்கள் கணிசமான தொகையைப் பாதுகாத்து வைக்கத் தங்கம் (Gold) சிறந்த தேர்வாக (Investment Schemes For Women) இருக்கிறது. ஏனெனில் தங்கம் விலை தற்போது புதிய உச்சம் தொட்டு வரும் நிலையில், தங்கத்தில் முதலீடு செய்தால் நம்மை பணவீக்கத்தில் இருந்தும் பாதுகாக்கும். இப்போது தங்கத்தை வாங்க பல்வேறு வழிகள் (நகைகள், தங்க நாணயம், டிஜிட்டல் கோல்ட்) உள்ள நிலையில், அதில் உங்களுக்கு எது சிறந்ததோ அதைத் தேர்வு செய்து முதலீடு செய்யலாம்.

Latest Slideshows

Leave a Reply