IPL 18 Season Starts Today : ஐபிஎல் 18-வது சீசன் போட்​டிகள் கலை நிகழ்ச்​சிகளு​டன் இன்று தொடங்​கு​கிறது

ஐபிஎல் டி20 கிரிக்​கெட் திரு​விழா​வின் 18-வது சீசன் போட்​டிகள் கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் (IPL 18 Season Starts Today) பாலிவுட் நடிகை திசா பதானி நடனத்துடன் இன்று மாலை 6.00 மணிக்கு  தொடங்​கு​கிறது. இன்று தொடங்கி மே மாதம் 25-ம் தேதி வரை நடை​பெறும் இந்த ஐபிஎல் கிரிக்​கெட் திரு​விழா​வில் 5 முறை சாம்​பியன் அணிகளான சென்னை சூப்​பர் கிங்​ஸ், மும்பை இந்​தி​யன்​ஸ், 3 முறை சாம்​பிய​னான கொல்​கத்தா நைட் ரைடர்​ஸ், 2008-ல் பட்​டம் வென்ற ராஜஸ்தான் ராயல்​ஸ், 2016-ல் வாகை சூடிய சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத், 2022-ல் கோப்பையை வென்ற குஜ​ராத் டைட்​டன்ஸ் ஆகிய அணி​களு​டன் 17 சீசன்​களாக சாம்​பியன் பட்​டம் வெல்ல போராடும் ராயல் சேலஞ்​சர்ஸ் பெங்களூரு, பஞ்​சாப் கிங்ஸ் அணி​களும் மற்​றும் கடந்த 3 ஆண்​டு​களுக்கு முன்​னர் அறி​முக​மாகி 2 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி​யும் சாம்​பியன் பட்​டம் வெல்​வதற்​காக போட்டியிடவுள்ளன.

கொல்​கத்தா நைட் ரைடர்​ஸ் Vs ராயல் சேலஞ்​சர்ஸ் பெங்​களூரு (IPL 18 Season Starts Today)

இன்று தொடங்கும் ஐபிஎல் 18-வது சீசனின் தொடக்க ஆட்டத்தில் கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நடப்பு சாம்​பிய​னான கொல்​கத்தா நைட் ரைடர்​ஸ் அணி, ராயல் சேலஞ்​சர்ஸ் பெங்​களூரு அணி​யுடன் மோதுகிறது. இரு அணிகளும் புதிய கேப்டனின் (IPL 18 Season Starts Today) தலைமையில் களமிறங்கவுள்ளன. கடந்த 17-வது சீசனில் கொல்​கத்தா அணி​யின் கேப்​ட​னாக இருந்த ஸ்ரேயஸ் ஐயர் பஞ்​சாப் அணிக்கு சென்​றுள்​ளார். அதே சமயத்தில் ராயல் சேலஞ்​சர்ஸ் பெங்​களூரு அணி இதுவரை ஒரு சர்​வ​தேச டி20 கிரிக்​கெட்​டில் கூட அறிமுகமாகாத ரஜத் பட்டிதார் தலை​மை​யில் களமிறங்​கு​கிறது.

IPL 18 Season Starts Today - Platform Tamil

கொல்​கத்தா அணி​யின் நட்சத்திர வீரர்கள்

கொல்​கத்தா அணி​யில் டாப் ஆர்​டரில் சுனில் நரேன், வெங்​கடேஷ் ஐயர், குயிண்டன் டி காக், அஜிங்க்ய ரஹானே, ரஹ் மனுல்லா குர்​பாஸ் பலம் (IPL 18 Season Starts Today) சேர்க்கிறார்கள். மிடில் ஆர்டரில் மணீஷ் பாண்​டே, ரோவ்​மன் பாவெல், ரகு​வன்ஷி, ஆந்த்ரே ரஸ்​ஸல், ரிங்கு சிங் ஆகியோரின் தாக்​குதல் ஆட்​டம் கொல்​கத்தா அணிக்கு பலம் சேர்க்கிறது. மேலும் சுழற்​பந்​து​வீச்​சில் வருண் சக்​ர​வர்த்​தி, சுனில் நரேன் இவர்களுடன் மொயின் அலியும் பலம் சேர்க்கிறார். வேகப்​பந்​து​வீச்​சில் அன்​ரிச் நோர்க்​கி​யா, ஹர்​ஷித் ராணா, ஸ்பென்​சர் ஜான்சன், உம்​ரான் மாலிக் கொல்​கத்தா அணிக்கு நம்​பிக்கை அளிக்கிறார்கள்.

பெங்​களூரு அணி​யின் நட்சத்திர வீரர்கள்

பெங்​களூரு அணி​யில் டாப் ஆர்​டரில் விராட் கோலி, தேவ்​தத் படிக்​கல், பில் சால்ட், டிம் டேவிட், ஜிதேஷ் ஷர்மா, லியாம் லிவிங்​ஸ்​டன் ஆகியோர் பலம் (IPL 18 Season Starts Today) சேர்க்கிறார்கள். வேகப்பந்துவீச்​சில் புவனேஷ்வர் குமார்,  ஹேசில்​வுட், ரொமாரியோ ஷெப்​பர்ட், யாஷ் தயாள், லுங்கி நிகிடியும், சுழற்​பந்துவீச்சில் ஜேக்​கப் பெத்​தேல், கிருணல் பாண்​டி​யா, சுயாஷ் சர்மா ஆகியோர் ராயல் சேலஞ்​சர்ஸ் பெங்​களூரு அணிக்கு நம்​பிக்கை அளிக்கிறார்கள்.

Latest Slideshows

Leave a Reply