IPL 2023 CSK vs KKR: 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி

கொல்கத்தா அணியானது சென்னை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரை இறுதி வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டது.

IPL 2023 CSK vs KKR: சென்னை சூப்பர் கிங்ஸ் IX

ருத்ராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, அம்பதி ராயுடு, சிவம் துபே, மொயின் அலி, ரவீந்திரஜடேஜா, எம்எஸ் தோனி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா, மதிஷா பத்திரனா.

IPL 2023 CSK vs KKR: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் IX

ஜேசன் ராய், ராஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேச ஐயர், நிதிஷ் ராணா, ரிங்கு சிங்கு, ஆண்ட்ரே ரஸ்ஸல், ஷர்துல் தாக்கூர், சுனில் நரைன், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, சுயாஷ் சர்மா.

சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தார்.

IPL 2023 CSK vs KKR - சென்னை அணியின் தொடக்கம்

சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே இருவரும் களமிறங்கினர். இதில் ருத்ராஜ் கெய்க்வாட் 13 பந்துகளில் 17 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய அஜிங்க்யா ரஹானே 16 ரன்களில் வெளியேறினார். இவரை தொடர்ந்து கான்வே 28 பந்துகளுக்கு 30 ரன்களை எடுத்து வெளியேறினார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் தொடர்ந்து ஆட்டமிழந்து வெளியேறினர். அதிரடியாக வெளியாடிய சிவம் துபே 34 பந்துகளுக்கு 48 ரன்களும், தோனி 3 பந்துகளில் 2 ரன்களும் எடுத்து இருவரும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்களை பறிகொடுத்து 144 ரன்களை குவித்தது.

IPL 2023 CSK vs KKR - கொல்கத்தா அணியின் வெற்றி

இதனைத் தொடர்ந்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி கொல்கத்தா அணி விளையாடியது. கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் ராஹ்மானுல்லா குர்பாஸ் இருவரும் களமிறங்கினர். இதில் குருபாஸ் 4 பந்துகளில் 1 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய வெங்கடேச ஐயர் 9 ரன்களும், ஜேசன் ராய் 12 ரன்களும் எடுத்து வெளியேறினர். அடுத்ததாக களமிறங்கிய நிதிஷ் ராணா மற்றும் ரிங்கு சிங்கு இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் ரிங்கு சிங்கு அரை சதம் எடுத்து 54 ரன்களை குவித்தார். நிதிஷ் ராணா 57 ரன்களிலும், ரஸ்ஸல் 2 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 18.3 ஓவரில் 4 விக்கெட்களை இழந்து 147 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.

Latest Slideshows

Leave a Reply