IPL 2023 CSK vs MI: 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே

IPL 2023 CSK vs MI: ஐபிஎல் தொடரின் 12வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் சிஎஸ்கே அணி பீல்டிங்கை எடுத்தது.

IPL 2023 CSK vs MI: முதலில் களமிறங்கிய மும்பை:-

முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 21 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இஷான் கிஷான் 23 ரன்களும், . கேமரூன் கிரீன் 12 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 1 ரன்னும், திலக் வர்மா 22 ரன்களில் ஆட்டமிழந்தனர். இவரை தொடர்ந்து விளையாடிய அர்ஷத் கான் 2, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 5 ரன்களும் எடுத்தனர். மும்பை அணி சிஎஸ்கே -யின் சான்டர் மற்றும் ஜடேஜாவின் சூழலில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தனர். சான்டர் 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனால் மும்பை அணி 20 ஓவரில் 157 ரன்கள் மட்டுமே எடுத்தது.

IPL 2023 CSK vs MI: 158 இலக்கை

158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கான்வே மற்றும் கெய்க்வாட் ஆகியோர் வழக்கம் போல் களமிறங்கினர். இதில் பெஹரன்டோர்ஃப் முதல் ஓவரிலேயே கான்வேவை ஒரு ரன்கள் கூட எடுக்க விடாமல் வெளியேற்றினார். அடுத்ததாக மூத்த வீரர் அஜிங்கியா ரஹானே ஒன் டவுன் வீரராக களமிறங்கினர்.

IPL 2023 CSK vs MI: அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹானே

வழக்கமாக கெய்க்வாட் தான் அதிரடியாக விளையாடுவர் ஆனால் நேற்று நடந்த போட்டியில் ரஹானே புகுந்து விளையாடினார். பெஹரன்டோர்ஃப்பின் இரண்டாவது ஓவரில் ஒரு சிக்ஸருடன் தனது ஆட்டத்தை தொடங்கிய அவர் அர்ஷத் கான் வீசிய ஐந்தாவது ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகள் உட்பட 23 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து அதிரடியை தொடர்ந்த ரஹானே 19 பந்துகளில் அரை சதத்தை கடந்தார். பியூஸ் சாவ்லாவின் ஓவரில் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகள் அடித்த அவர் 27 பந்துகளில் 7 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் உட்பட 61 ரன்களை குவித்தார்.

ரஹானே ஆட்டமிழந்த பிறகு, கெய்க்வாட் மற்றும் ஷிவம் துபே இருவரும் ஒரு சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 28 ரன்களில் ஷிவம் துபே ஆட்டமிழந்தார். இவரையடுத்து களமிறங்கிய அம்பதி ராயுடு 11 பந்தில் பவுண்டரியை அடித்தார். வெற்றி இலக்கு குறைவாக இருந்ததால் சென்னை அணி எளிமையாக வெற்றி பெற்றது. சென்னை அணி 159 ரன்களை குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கெய்க்வாட் 40 ரன்களும், அம்பதி ராயுடு 20 ரன்களும் எடுத்தனர். இதுவரை 3 போட்டிகள் விளையாடிய சென்னை அணிக்கு இது இரண்டாவது வெற்றியாகும்.

Latest Slideshows

Leave a Reply