IPL 2023 CSK vs PBKS: சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி த்ரில் வெற்றி
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய முதல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அவர்களது சொந்த மைதானத்தில் வீழ்த்தியது.
IPL 2023 CSK vs PBKS: சென்னை சூப்பர் கிங்ஸ் IX
எம்எஸ் தோனி, ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, சிவம் துபே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, அஜிங்க்யா ரஹானே, அம்பதி ராயுடு, மதீஷ பத்திரன, துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீ க்ஷனா, ஆகாஷ் சிங்.
IPL 2023 CSK vs PBKS: பஞ்சாப் கிங்ஸ் IX
பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான், அதர்வ தைடே, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கர்ரன், ஜிதேஷ் சர்மா, ஷாரு கான், சிக்கந்தர் ராசா, ஹெர்ப்ரீத் பிரர், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், ககிசோ ரபாடா.
என்எம். சிதம்பரம் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.
IPL 2023 CSK vs PBKS - சென்னை அணியின் தொடக்கம்
டாஸ் வென்றதை தொடர்ந்து சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டெவான் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் களமிறங்கினர். இதில் ருதுராஜ் 37 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பிறகு சிவம் துபே, கான்வேயுடன் இணைந்து விளையாடினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கான்வே அரைசதம் அடித்து அசத்தினார். சிவம் துபே 28 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்ததாக களம் இறங்கிய மொயீன் அலி 10 ரன்களிலும், ஜடேஜா 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி இரண்டு பந்துகளில் 2 சிக்சர்களை விளாசினார் கேப்டன் தோனி. கடையில் சென்னை அணி கொடுக்கப்பட்ட 20 ஓவரில் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 200 ரன்களை எடுத்தனர்.
IPL 2023 CSK vs PBKS - பஞ்சாப் த்ரில் வெற்றி
201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரராக பிரப்சிம்ரன் சிங் மற்றும் ஷிகர் தவான் இருவரும் களமிறங்கினர். இதில் அதிரடியாக விளையாடிய பிரப்சிம்ரன் சிங் 42 ரன்களிலும், ஷிகர் தவான் 28 ரன்களிலும், அடுத்ததாக களம் இறங்கிய அதர்வ தைடே13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு லியாம் லிவிங்ஸ்டோன் மற்றும் சாம் கர்ரன் இருவரும் ஜோடி சேர்ந்தனர். அதிரடியாக விளையாடிய லிவிங்ஸ்டோன் , துஷார் தேஷ்பாண்டே வீசிய ஒரே ஓவரில் 3 சிக்சர்களை விளாசிய நிலையில் அதே ஓவரில் 40 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக விளையாடிய சாம் கர்ரன் 29 ரன்களில் ஆட்டமிழக்க, ஜிதேஷ் சர்மா 21 ரன்களும் எடுத்து வெளியேறினார். இறுதியில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 1 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிக்கந்தர் ராசா 3 ரன்களை எடுத்தார். இதனால் பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 201 ரன்களை எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.