IPL 2023 DC vs CSK: 77 ரன்கள் வித்யாசத்தில் சென்னை அபார வெற்றி
சென்னை அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் 2 வது இடத்திற்கு முன்னேரியுள்ளது.
IPL 2023 DC vs CSK:சென்னை சூப்பர் கிங்ஸ் IX
ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, சிவம் துபே, எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, அஜின்க்யா ரஹானே, மொயீன் அலி, அம்பதி ராயுடு, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா, மதீஷா பத்திரனா.
IPL 2023 DC vs CSK: டெல்லி கேபிடல்ஸ் IX
பிருத்வி ஷா, டேவிட் வார்னர், பில் உப்பு, ரிலீ ரோசோவ், யாஷ் துள், அக்சர் படேல், அமன் ஹக்கீம் கான், லலித் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, குல்தீப் யாதவ், சேதன் சகாரியா, காலில் அகமது.
நேற்று அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
IPL 2023 DC vs CSK - சென்னை அணியின் அதிரடி
சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே இருவரும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதங்களை குவித்தனர். இதில் ருதுராஜ் கெய்க்வாட் 50 பந்துகளுக்கு 79 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து வந்த சிவம் துபே அதிரடியா விளையாடி 9 பந்துகளில் 22 ரன்களை குவித்து வெளியேறினார். அடுத்து தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவோன் கான்வே 52 ரன்களுக்கு 87 ரன்களை குவித்து வெளியேறினார். அடுத்ததாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா 20 ரன்களும், எம்எஸ் தோனி 5 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். சென்னை அணி கொடுக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 223 ரன்களை குவித்தது.
IPL 2023 DC vs CSK - டெல்லி அணியின் தோல்வி
இதனை தொடர்ந்து 224 ரன்களை நோக்கி டெல்லி அணி களமிறங்கியது. டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிருத்வி ஷா, டேவிட் வார்னர் இருவரும் களமிங்கினர். இதில் 5 ரன்களும், அடுத்து விளையாடிய ஃபில் சால்ட் 3 ரன்களும், ரிலீ ரோசோவ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து விளையாடிய யாஷ் துள் 13 ரன்களும், அக்சர் படேல் 15 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து வந்த வீரர்கள் ஆட்டமிழந்தனர். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டேவிட் வார்னர் 58 பந்துகளுக்கு 86 ரன்களை குவித்து வெளியேரினார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் ஆட்டமிழந்த நிலையில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 146 குவித்தது. இதனால் 77 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அபார வெற்றி பெற்றது.