IPL 2023 DC vs KKR: வெற்றி கணக்கை தொடங்கிய டெல்லி !

  • ஐபிஎல் தொடரின் 28ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி  கேபிடல்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்ததால் kkr அணி முதலில் பேட்டிங் செய்ய வந்தது. இன்னும் இந்த சீசனில் டெல்லி அணி ஒரு வெற்றி கூட பெறாதது குறிப்பிடத்தக்கது.
  • கொல்கத்தாவுக்கு எதிரான இந்தப் போட்டி மழை காரணமாக சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது. இவ்வளவு நேரம் மழையால் பாதிக்கப்பட்டும் ஓவர் ஏதும் குறைக்காமல் போட்டியை நடத்துவதாக நடுவர்கள் அறிவித்தனர். இந்த ஆட்டத்தில் டெல்லி அணியில் இஷாந்த் சர்மா சேர்க்கப்பட்டதன் மூலம் 2 ஆண்டுகளுக்கு பிறகு இஷாந்த் சர்மா ஐபிஎல் போட்டியில் விளையாடினார்.

IPL 2023 DC vs KKR - கொல்கத்தா திணறல் :

இதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் 4 ரன்களிலும், கடந்த ஆட்டத்தில் சதம் விளாசிய வெங்கடேஷ் ஐயர் டக் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் நிதிஷ் ரானா 4 ரன்களிலும், மந்தீப் சிங் 12 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க கொல்கத்தா அணி நெருக்கடிக்கு உள்ளானது. அடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் 6 ரன்களில் வெளியேறி ஏமாற்றினார். தொடக்க வீரர் ஜேசன் ராய் மட்டும் பொறுப்புடன் விளையாடி 39 பந்துகளில் 43 ரன்கள் சேர்க்க, இறுதியில் தனி ஆளாக போராடிய ஆண்டிரு ரஸல் 38 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.

IPL 2023 DC vs KKR - வார்னர் அதிரடி :

இதனையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் பிரித்வி ஷா 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் 2 ரன்களிலும், அடுத்து வந்த இங்கிலாந்து வீரர் பில் சால்ட் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் டேவிட் வார்னர் மட்டும் 11 பவுண்டரிகளை அடித்து 57 ரன்கள் விளாசினார். எனினும் அவர் ஆட்டமிழந்த உடன், ஆட்டத்தில் மீண்டும் சரிவு ஏற்பட்டது. 15 ஓவரில் வெற்றி பெற வேண்டிய போட்டியில் டெல்லி அணி 4 பந்துகள் எஞ்சிய நிலையில் தான் வென்றது. இதன் மூலம் முதல் வெற்றியை டெல்லி பெற்றது.

IPL 2023 DC vs KKR AWARDS:

  • Player Of The Match: Ishant Sharma
  • ev Electric Striker Of The Match: David Warner
  • Herbalife Active Catch Of The Match: Mitchell Marsh
  • Visit Saudi Beyond The Boundaries Longest 6: Andre Russell
  • RuPay On-The-Go 4s: David Warner
  • UPSTOX Most Valuable Asset Of The Match: David Warner
  • Dream11 Gamechanger Of The Match: David Warner

Latest Slideshows

Leave a Reply