IPL 2023 Final CSK vs GT: 5வது முறையாக கோப்பையை வென்று சென்னை அணி வரலாற்று சாதனை

பரபரப்பான இறுதி போட்டியில் கடைசி பந்தில்  பவுண்டரி அடித்து சென்னை அணிக்கு வெற்றியை தேடி தந்தார் ஜடேஜா.

IPL 2023 Final CSK vs GT மழை குறுக்கீடு :

28.05.2023 அன்று நடைபெற வேண்டிய இறுதிப்போட்டி மழை காரணமாக நேற்று நடைபெற்றது. இரு அணிகளும் சம பலத்துடன் களமிறங்கின.

IPL 2023 Final CSK vs GT - குஜராத் பேட்டிங் :

முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் களமிறங்கியது. கில் மற்றும் சாகா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தனர். அதிரடியாக ஆடிய கில் 39 ரன்களில் டோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்கில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து ஆட வந்த தமிழக இளம் வீரர் சாய் சுதர்சன் முதலில் பொறுமையாக ஆடினாலும் போக போக வெளுத்து வாங்கினார். இதற்கிடையில் அரைசதம் அடித்த நிலையில் சாகா அவுட் ஆனார்.

அனால் மறுமுனையில் ருத்ரதாண்டவம் ஆடிய சுதர்சன் சிக்ஸர் பவுண்டரிகளாக விளாசினார். இவருக்கு நன்றாக கம்பனி கொடுத்து பாண்டியா 12 பந்துகளில் 22 ரன்கள் குவித்தார். இறுதியில் சதம் அடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுதர்சன் 96 ரன்கள் குவித்து வெளியேறினார். இதனால் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 214 ரன்கள் குவித்தது. சென்னை அணி தரப்பில் மதீஷா பத்திரனா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

IPL 2023 Final CSK vs GT - சென்னைக்கு கடினமான இலக்கு :

சென்னை அணி பேட்டிங் களமிறங்குவதற்கு முன் மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் 15 ஓவர்களில் 171 ரன்கள் இலக்காக அறிவிக்கப்பட்டது. தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய சென்னை வீரர்கள் பவுண்டரிகளாக விளாசினர். இதனால் அனைவரும் அதிரடியாக ஆடி அவுட் ஆகினர். ருதுராஜ் 26 ரன்களும் கான்வே  47  ரன்களும் துபே 31 ரன்களும் அதிரடியாக ஆடினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் டோனி முதல் பந்திலேயே அவுட் ஆகி ஏமாற்றினார். சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் 4 பந்துகளில் வெறும் 3 ரன்களை மட்டுமே கொடுத்தார். மோஹித் சர்மா. கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டபோது 1 சிக்சர் மற்றும் 1 பவுண்டரி அடித்து ஜடேஜா சென்னை அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதனால் சென்னை அணி 5 வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம் சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 கோப்பைகளுடன் சமமாக உள்ளனர்.

IPL 2023 Final CSK vs GT AWARDS :

  • Player of the Match: Devon Conway
  • Game-changer of the Match: Sai Sudharsan
  • Catch of the Match: MS Dhoni
  • Most Valuable Asset of the Match: Sai Sudharsan
  • Longest Six of the Match: Sai Sudharsan
  • Electric Striker of the Match: Ajinkya Rahane
  • Most Fours in the Match: Sai Sudharsan

IPL 2023 Full list of award winners:

  • Orange Cap award: Shubman Gill
  • Purple Cap award: Mohammad Shami
  • Fairplay of the Season award: Delhi Capitals
  • Catch of the Season award: Rashid Khan
  • Longest Six of the Season award: Faf du Plessis 
  • Most Fours award: Shubman Gill
  • Most Valuable Player of the Season award: Shubman Gill.
  • Gamechanger of the Season award: Shubman Gill.
  • Super Striker of the Season award: Glenn Maxwell.
  • Emerging Player of the Year award: Yashasvi Jaiswal.

Latest Slideshows

Leave a Reply