IPL 2023 Final Last Over: கடைசி ஓவரில் சொதப்பிட்டேன்.. நெஹ்ரா சொன்னது என்ன? மோகித் சர்மா பதில்..

ஐ.பி.எல் தொடரின் பைனலில் கடைசி ஓவரை வீசிய பின் இப்போது வரை எனக்கு தூக்கம் வரவில்லை என்று குஜராத் அணியின் அனுபவ பந்துவீச்சாளர் மோகித் சர்மா வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி 5 வது முறையாக பட்டத்தை வென்றது. கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரை வீசிய மோகித் சர்மா முதல் 4 பந்துகளில் வெறும் 3 ரன்களை மட்டுமே  கொடுத்த மோகித் சர்மா, கடைசி 2 பந்துகளில் 10 ரன்களை அள்ளி கொடுத்து அதிர்ச்சியளித்தார். இதனால் குஜராத் அணி 2 வது  கோப்பையை வெல்லும் கனவை இழந்தது.

இருந்தாலும் பரப்பான கடைசி கட்டத்தில் சிறப்பாக பந்து வீசிய மோகித் சர்மாவுக்கு பலரும் பாராட்டுக்கள்  தெரிவித்து வந்தனர். அது மட்டும் அல்லாமல் மோகித் சர்மா 5 வது பந்தை வீசுவதற்கு முன் பவுலிங் பயிற்சியாளர் நெஹ்ரா, ஜெயந்த் யாதவ் மூலம் கொடுத்த ஆலோசனையே தோல்விக்கு காரணமாக அமைந்தது என விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து அணியின் பந்து வீச்சாளர்  மோகித் சர்மா பேசுகையில், கடைசி 2 பந்துகளை மட்டும் மோசமாக வீசியதால் எனக்கு இன்னும் கூட தூக்கமே வரவில்லை எனவும் இந்த பந்தை வீசியிருக்கலாம் , அந்த பந்தை வீசியிருக்கலாம் என்றே எனது உணர்வுகள்  சிந்தித்துக் கொண்டே இருக்கிறது. இது சரியான உணர்வு அல்ல என்பது தெரியும். இதனால் இந்த உணர்வில் இருந்து முழுமையாக விடுபட விரும்புகிறேன். கடைசி ஓவரை வீச அழைத்த போது நான் எனது யார்கர் திட்டத்தில் நான் சரியாக இருந்தேன். ஆனால் அதை கடைசி நேரத்தில் சரியாக செய்ய முடியாதது மிகுந்த வேதனை அளிக்கிறது.

இது போன்ற நேரங்களில்  பந்துவீசுவதற்காக தான் ரொம்ப தீவிரமாக பயிற்சி மேற்கொண்டேன். அனைத்து பந்துகளையும் யார்க்கராக வீசுவது தான் என் திட்டமாக இருந்தது. அதையே கேப்டன் மற்றும் பயிற்சியாளரிடம் கூறினேன். 4 வது பந்துக்கு பின் எனது திட்டம் என்னவென்று கேட்டார்கள். அப்போது நான் மீண்டும் யார்க்கரை வீசப்போவதாக கூறினேன். ஆனால் நான் வீசிய 5 வது பந்து லெந்த் பாலாக விழுந்தது என்று தெரிவித்தார். இந்த நிலையில் மோகித் சர்மாவின் பேட்டியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர்  எந்த கருத்தையும்  தெரிவிக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. ஆனாலும்  4வது மற்றும் 5வது ஆகிய பந்துகளுக்கு இடையில் கொஞ்ச நேர இடைவெளி ஆட்டத்தின் நிலையையே மாற்றிவிட்டதாக கிரிக்கெட் முன்னணி வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மோஹித் சர்மா இதற்கு முன்னர் காலங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி இருந்தார்.கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை அணியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி purple cap வென்றது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply