IPL 2023 GT vs CSK: முதல் வெற்றியை ருசித்த பாண்டியா

IPL 2023 GT vs CSK: நேற்று தொடங்கிய ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் தொடக்க போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

ஐ.பி.எல் ஆரம்பம் :

10 அணிகள் பங்கேற்கும் 16வது ஐ.பி.எல்  கிரிக்கெட் தொடர் நேற்று இரவு முதல் கோலாகலமாக தொடங்கியது. குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில்  நடைபெற்ற முதல் ஆட்டத்தில் குஜராத் – சென்னை அணிகள் மோதின .

குஜராத் அணி டாஸ் வெற்றி:

டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் பாண்டியா முதலில் சென்னை அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். தொடக்க வீரர்களாக கான்வே – ருதுராஜ் களம் இறங்கினர். ருதுராஜ் அதிரடியாக தொடங்கிய போதும்  கான்வே 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் வந்த மொயீன் அலி 24 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.  ஸ்டோக்ஸ்,ராயுடு ஆகியோர் சொற்ப ரன்னில்  ஆட்டமிழந்தனர். களத்தில் சிக்ஸர்களை பொழிய தொடங்கிய ருதுராஜ் 50 பந்துகளில் 9 சிக்ஸர்களை பறக்கவிட்டு 92 ரன்கள் குவித்தார்.

இறுதியில்,  சென்னை அணி 178 ரன்கள் எடுத்தது. இதனால், குஜராத் அணிக்கு 179 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. குஜராத் அணியில்  ஷமி, ரஷித் கான், அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

IPL 2023 GT vs CSK வெற்றி இலக்கு 179:

 179 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட குஜராத் அணியில்  கில் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 63 ரன்னில் வெளியேறிய நிலையில், சென்னை அணிக்கான வெற்றி  வாய்ப்பு உருவானது.  பின்னர் 19வது ஓவரில்  தீபக் சாஹர் பந்தில் ரஷித் கான் அடித்த ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி ஆட்டத்தை மாற்றியது.

குஜராத் வெற்றி :

குஜராத் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ராகுல் தெவாட்டியா 1 சிக்ஸர் 1 பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். இதன் மூலம், குஜராத் அணி சென்னை அணியை வீழ்த்தியது.

சென்னையின் அடுத்த போட்டி:

சென்னை அணி தனது அடுத்த போட்டியில் நாளை இரவு லக்னோ அணியை சந்திக்கிறது.

Latest Slideshows

This Post Has 2 Comments

  1. Ganesh

    I am truly thankful to the owner of this website who has shared this fantastic piece of writing at at this place.

Leave a Reply