IPL 2023 GT vs LSG: 56 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய முதல் லீக் ஆட்டத்தில் 56 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை குஜராத் அணி வீழ்த்தியது.
IPL 2023 GT vs LSG: குஜராத் டைட்டன்ஸ் IX
விருத்திமான் சாஹா, சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், விஜய் சங்கர், அபினவ் மனோகர், ராகுல் தெவாட்டியா, ரஷித் கான், மோஹித் ஷர்மா, முகமது ஷமி, நூர் அகமது, அல்ஜாரி ஜோசப்.
IPL 2023 GT vs LSG: லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் IX
கைல் மேயர்ஸ், குயின்டன் டி காக், தீபக் ஜூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, ஸ்வப்னில் சிங், க்ருணால் பாண்டியா, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், அவேஷ் கான், யாஷ் தாக்கூர்.
அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது.
IPL 2023 GT vs LSG - குஜராத் அணியின் அதிரடி
குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் விருத்திமான் சாஹா 81 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 94 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹர்திக் பாண்டியா 25 ரன்களிலும், டேவிட் மில்லர் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கொடுக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 2 விக்கெட்களை இழந்து 227 ரன்களை குவித்தது. இதையடுத்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் லக்னோ அணி களம் இறங்கியது.
IPL 2023 GT vs LSG - லக்னோ அணியின் தோல்வி
லக்னோ தொடக்க ஆட்டக்காரர்களான கைல் மேயர்ஸ் மற்றும் குயின்டன் டி காக் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். கைல் மேயர்ஸ் 48 ரன்களிலும், டி காக் 70 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் அடுத்த பேட்ஸ்மேன்களான தீபக் ஜூடா 11 ரன்களும், மார்கஸ் ஸ்டோனிஸ் 4 ரன்களும், நிக்கோலஸ் பூரன் 3 ரன்களும் எடுத்து வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் போட்டி குஜராத் அணியின் பக்கம் திரும்பியது.
நிர்ணியிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் லக்னோ அணி 7 விக்கெட்களை இழந்து 171 ரன்களை மட்டுமே எடுத்து. இதனால் குஜராத் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.