IPL 2023 GT vs SRH: 34 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி
குஜராத் டைட்டன்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வீழ்த்தி அரை இறுதிக்கு தேர்வாகியுள்ளது.
IPL 2023 GT vs SRH: குஜராத் டைட்டன்ஸ் IX
விருத்திமான் சாஹா, சுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, தசுன் ஷனக, ரஷித் கான், நூர் அகமது, முகமது ஷமி, மோஹித் ஷர்மா, யாஷ் தயாள்.
IPL 2023 GT vs SRH: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் IX
அன்மோல்பிரீத் சிங், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ராம், ராகுல் திரிபாதி, ஹென்ரிச் கிளாசென், சன்வீர் சிங், அப்துல் சமது, மார்க் ஜான்சன், புவ்வனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, ஃபசல்ஹக் பாரூக்கி, டி.நடராஜன்.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற போட்டில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
IPL 2023 GT vs SRH - குஜராத் அணியின் தொடக்கம்
குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய விருத்திமான் சாஹா 3 பந்துகளுக்கு ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தார். இவரை தொடர்ந்து சாய் சுதர்சன் 36 பந்துகளுக்கு 47 ரன்களும், ஹர்திக் பாண்டியா 8 ரன்களும், டேவிட் மில்லர் 7 ரன்களும், ராகுல் தெவாடியா 3 ரன்களும் எடுத்து தொடர்ந்து ஆட்டமிழந்து வெளியேறினர். தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 58 பந்துகளுக்கு சதம் அடித்து 101 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய ரஷித் கான்,நூர் அகமது மற்றும் முகமது ஷமி இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை அளித்தனர். தசுன் ஷனக 9 ரன்களும், மோஹித் ஷர்மா ரன் எதுவும் இல்லாமல் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 9 விக்கெட்களை இழந்து 188 ரன்களை குவித்தது.
IPL 2023 GT vs SRH - ஹைதராபாத் அணியின் தோல்வி
189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தொடர்ந்து ஹைதராபாத் அணி விளையாடியது. ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அன்மோல்பிரீத் 4 பந்துகளுக்கு 5 ரன்களும், அபிஷேக் சர்மாவும் 5 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக களமிறங்கிய ராகுல் திரிபாதி 1 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய ஐடன் மார்க்ராம் 10 ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக ஹென்ரிச் கிளாசென் அரைசதம் எடுத்து 64 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து விளையாடிய வீரர்கள் எதிர்பார்த்த அளவிற்கு ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். ஹைதராபாத் அணி கொடுக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 154 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் குஜராத் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.