IPL 2023 KKR vs CSK: 49 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சென்னை

ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற கொல்கத்தாக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 49 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

IPL 2023 KKR vs CSK: சென்னை சூப்பர் கிங்ஸ் IX

எம்எஸ் தோனி, ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜீங்க்யா ரஹானே, ரவீந்திர சடேஜா, சிவம் துபே, மொயீன் அலி, அம்பதி ராயுடு, மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மகேஷ், ஆகாஷ் சிங்.

IPL 2023 KKR vs CSK: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் IX

நாராயண் ஜெகதீசன், சுனில் நரைன், வெங்கடேச ஐயர், நிதிஷ் ராணா, ஜேசன் ராய், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், டேவிட் வைஸ், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி, குல்வந்த் கெஜ்ரொலியா, சுயாஷ் சர்மா.

பவுண்டரி எல்லைக் கோடு சிறிய அளவு உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

IPL 2023 KKR vs CSK - கொல்கத்தாவை புரட்டி போட்ட தோனி படை

கொல்கத்தாவின் புகழ்ப்பெற்ற ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி கொடுக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 235 ரன்களை குவித்தது. இதில் ருதுராஜ் கெய்க்வாட் 20 பந்துகளில் 35 ரன்களை குவித்தது, டெவோன் கான்வே 40 பந்துகளில் 56 ரன்களையும், அஜீங்க்யா ரஹானே 71 ரங்களும், சிவம் துபே அரைசதமும், ரவீந்திர சடேஜா 8 பந்துகளுக்கு 18 ரன்களும் எடுத்தனர்.

இதன் மூலம் சி எஸ்கே அணி இந்த தொடரில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. நடப்பு சீசனில் எஸ்கே பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. அதிக ரன்கள் அடித்தது இந்த போட்டியில் தான். ஐபிஎல் வரலாற்றிலேயே சிஎஸ்கே எடுத்த மூன்றாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவே ஆகும்.

IPL 2023 KKR vs CSK - வெற்றியை நோக்கி போராடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இதையடுத்து 236 ரன்களை எடுத்தால் புதிய சாதனையை படைக்கலாம் என்ற நெருக்கடியில் கொல்கத்தா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய ஜெகதீசன் 1 ரன்களும், சுனில் நரைன் ரன் ஏதும் அடிக்காமல் ஆட்டமிழந்தார். கேகேஆர் அணி 1 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது. அடுத்ததாக வெங்கடேஷ் ஐயர் 20 ரன்களும், நிதிஷ் ராணா 27 ரன்களும் எடுத்தனர். அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனைத்தொடர்ந்து ஜேசன் ராய் அதிரடியாக விளையாடி 61 ரன்களும், ரிங்கு சிங்கு 33 பந்துகளில் அரை சதம் அடித்து 53 ரன்களை போராடி எடுத்த நிலையில் ஆண்ட்ரே ரஸ்ஸல் அதிரடி கட்ட தவறியதால் கொல்கத்தா 20 ஓவரில் 8 விக்கெட் 186 ரன்களை மட்டுமே குவித்தது. இதனால் சிஎஸ்கே 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Latest Slideshows

Leave a Reply