IPL 2023 KKR vs PBKS: கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி
பஞ்சாப் அணியை வீழ்த்தி 5 வது வெற்றியை பதிவு செய்தது கொல்கத்தா அணி
IPL 2023 KKR vs PBKS: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் IX
ஜேசன் ராய், ரகுமானுல்லா குர்பாஸ், நிதிஷ் ராணா, வெங்கடேச ஐயர், ஆண்ட்ரே ரஸ்ஸல், ரிங்கு சிங்கு, ஷரதுல் தாக்கூர், சுனில் நரைன், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, சுயாஷ் சர்மா.
IPL 2023 KKR vs PBKS: பஞ்சாப் கிங்ஸ் IX
பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான், பானுகா ராஜபக்ச, லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, சாம் கர்ரன், ரிஷி தவான், ஷாரு கான், ஹெர்ப்ரீத் ப்ரார், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லிஸ்.
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனஸ் மைதானத்தில் நேற்றிரவு நடந்த 53வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது.
IPL 2023 KKR vs PBKS - பஞ்சாப் அணியின் தொடக்கம்
பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரசிம்ரன், ஷிகர் தவான் இருவரும் களமிறங்கினர். இதில் பிரப்சிம்ரன் சிங் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து வந்த பானுகா ராஜபக்ச ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். லியாம் லிவிங்ஸ்டன் 15 ரன்களும், ஜிதேஷ் சர்மா 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ஷிகர் தவான் ஐபிஎல் தொடரில் தனது அடுத்த 50வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். ஷிகர் தவான் 57 ரன்களிலும், சாம் கர்ரன் 4 ரன்னிலும், ஷிகர் தவான் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
கடைசி 2 ஓவர்களில் தமிழக வீரர் ஷாரு கான் மற்றும் ஹெர்ப்ரீத் ப்ரார் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது. ஷாரு கான் 21 ரன்களும், ஹெர்ப்ரீத் ப்ரார் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ராணா 2 விக்கெட்டுகளையும், சுயாஷ் சர்மா மற்றும் நிதிஷ் ராணா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
IPL 2023 KKR vs PBKS - கொல்கத்தா த்ரில் வெற்றி
180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜேசன் ராய், ரகுமானுல்லா குர்பாஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடினர். ரகுமானுல்லா குர்பாஸ் 15 ரன்களிலும், ஜேசன் ராய் 38 ரன்களிலும், வெங்கடேச ஐயர் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனை தொடர்ந்து விளையாடிய நிதிஷ் ராணா 51 ரன்களில் ஆட்டமிழந்தது வெளியேறினார்.
கடைசி ஓவரில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் வீசினார். முதல் 4 பந்துகளில் 4 ரன்கள் வந்தது. 5வது பந்தில் ஆண்ட்ரே ரஸ்ஸல் ரன்-அவுட் ஆனார். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரிங்கு சிங்கு பவுண்டரியுடன் வெற்றியை உறுதி செய்தார். கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 182 ரன்களை குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.