IPL 2023 KKR vs SRH: கொல்கத்தா 5 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

16வது ஐபிஎல் தொடரின் நேற்றையை ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் மோதின. இதில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

IPL 2023 KKR vs SRH: சன்ரைஸ்ர்ஸ் ஹைதராபாத் IX

அபிஷக் சர்மா, மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ராம், ஹாரி புரூக், ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத், மார்க் ஜான்சன், புவனேஸ்வர் குமார், மயங்க் மார்கண்டே, கார்த்திக் தியாகி, டி.நடராஜன்.

IPL 2023 KKR vs SRH: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் IX

ஜேசன் ராய், ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேச ஐயர், நிதிஷ் ராணா, ரிங்கு சிங்கு, ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், அனுகுல் ராய், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி.

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியில் கொல்கத்தா அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

IPL 2023 KKR vs SRH - கொல்கத்தா அணியின் 171 ரன்கள்

இதன்படி கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய், ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள். இதில் குர்பாஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்ததாக வந்த வெங்கடேச ஐயர் 7 ரன்களும், ஜேசன் ராய் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து நிதிஷ் ராணா மற்றும் ரிங்கு சிங்கு இணைந்து அதிரடியாக விளையாடினர். இதில் சிறப்பாக விளையாடிய நிதிஷ் ராணா 42 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆண்ட்ரே ரஸ்ஸல் 24 ரன்களில் ஆட்டமிழக்க, ரிங்கு சிங்கு 46 ரன்களில் ஆட்டமிழந்தார். கொடுக்கப்பட்ட 20 ஓவரில் கொல்கத்தா அணி 9 விக்கெட்களை இழப்பிற்கு 171 ரன்களை குவித்தது.

IPL 2023 KKR vs SRH - ஹைதராபாத் அணியின் தோல்வி

ஹைதராபாத் அணி 172 என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அபிஷக் சர்மா 9 ரன்களிலும், மயங்க் அகர்வால் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து ராகுல் திரிபாதி 20 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அடுத்தடுத்த விக்கெட்களை இழந்து வந்த ஹைதராபாத்தின் வெற்றிக்கு கடைசி 1 ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் அப்துல் சமத் மற்றும் புவனேஸ்வர் குமார் இருவரும் காலத்தில் இருந்தனர். கடைசி ஓவரை கொல்கத்தா அணியில் இருந்து வருண் சக்ரவர்த்தி வீசினார். கடைசி வரின் மூன்றாவது பந்தில் அப்துல் சமத் 21 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் ஹைதராபாத் அணி கொடுக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்களை இழந்து 166 ரன்களை எடுத்தது. இதனால் 5 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி, ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.

Latest Slideshows

Leave a Reply