IPL 2023 LSG vs DC: மார்க் வுட் வேகத்தில் சுருண்டது டெல்லி
IPL 2023 LSG vs DC: கடந்த சீசனில் முதல் தொடரிலேயே 4-வது இடத்தை பிடித்த லக்னோ அணி, டெல்லிக்கு எதிரான 2 லீக் ஆட்டத்திலும் வெற்றி பெற்றிருந்தது. கேப்டன் ராகுல், தீபக் ஹூடா, குருணல் பாண்ட்யா, நிகோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோனிஸ், ரவி பிஷ்னோய், அவேஷ் கான் அணிக்கு நம்பிக்கை அளிக்கிறார்கள்.
டெல்லி அணியில் கேப்டன் ரிஷப் பண்ட் காயத்தால் ஆடாத நிலையில் வார்னர் அணியை வழிநடத்தினார். மிட்செல் மார்ஷ், பிரித்வி ஷா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ்,ரோவ்மன் பவெல் என்று டெல்லி அணிக்கு பலம் சேர்க்கின்றனர். லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொண்டது.
IPL 2023 LSG vs DC - டெல்லி அணி பந்து வீச்சு:
இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் வார்னர் முதலில் லக்னோ அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதன்படி களமிறங்கிய லக்னோ சூப்பர் அணியில் கைல் மேயர்ஸ், ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் கேப்டன் கே.எல்.ராகுல் 8 ரன்களில் வெளியேற,மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கைல் மேயர்ஸ் வெறித்தனமாக ஆடினார். அனைத்து பந்துகளையும் சிக்சரும் பவுண்டரியுமாக விரட்டிய கைல் மேயர்ஸ், அரைசதம் கடந்த நிலையில் 2 பவுண்டரி 7 சிக்சருடன் 78 ரன்கள் குவித்தார்.
தீபக் ஹூடா 17 ரன்களும், ஸ்டாய்னஸ் 12 ரன்களிலும் வெளியேறினர். அதிரடியாக விளையாடிய பூரன் 2 பவுண்டரி 3 சிக்சருடன் 36 ரன்களும், இறுதியாக வந்த இளம் வீரர் ஆயுஷ் பதோனி வந்த வேகத்தில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார். கடைசி பந்தில் மாற்று வீரராக களமிறங்கிய கௌதம் சிக்ஸர் அடிக்க லக்னோ அணி 193 ரன்கள் குவித்தது.
டெல்லி அணியில் கலீல் அகமது, சேட்டன் சக்காரியா ஆகியார் தலா 2 விக்கெட்டுகளும், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகியார் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
IPL 2023 LSG vs DC - கடினமான இலக்கு:
தொடர்ந்து 194 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் ப்ரித்வி ஷா, வார்னர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 12 ரன்கள் எடுத்திருந்த ப்ரித்வி ஷா மார்க் வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.அடுத்த பந்திலேயே மார்ஷ் போல்டு ஆகி வெளியேறினார்.அடுத்து வந்த சர்ப்ராஸ் கான் 4 ரன்னில் வெளியேற இந்த 3 விக்கெட்டுகளையும் மார்க் வுட் வீழ்த்தினார்.
கேப்டன் வார்னர் 56 (48), ரூசோவ் 30 (20) ஆகியோர் மட்டும்தான் பெரிய ஸ்கோர் அடித்தார்கள்.டெல்லி அணி ஓவர்கள் முடிவில் 143/9 ரன்களை மட்டும் சேர்த்து, இதனால் லக்னோ அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மார்க் வுட் 4 ஓவர்களில் 14 ரன்களை மட்டும் கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றினார்.ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய் இருவரும் 2 விக்கெட்களை வீழ்த்தினார்கள்.
தோனி vs ராகுல் :
லக்னோ அணி தனது அடுத்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியை அதன் சொந்த மைதானத்தில் எதிர்கொள்கிறது.