IPL 2023 LSG vs GT: லக்னோ அணியை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத்
ஐபிஎல் தொடரின் 30வது லீக்ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வென்றது.
IPL 2023 LSG vs GT: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
கே.எல். ராகுல், கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன்,ஆயுஷ் படோனி, நவீன்-உல்-ஹக், அமித் மிஸ்ரா, அவேஷ் கான், ரவி பிஷ்னோய்.
IPL 2023 LSG vs GT: குஜராத் டைட்டன்ஸ்
ஷுப்மான் கில், விருத்திமான் சாஹா, விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், ராகுல் தேவாடியா, அபினவ் மனோகர், ரஷித் கான், நூர் அகமது, முகமது ஷமி, மொஹித் சர்மா.
இந்த ஐபிஎல் தொடரானது லக்னோ நகரில் நடைபெற்றது. குஜராத் அணி டாஸ் வென்றது. குஜராத் அணியே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
IPL 2023 LSG vs GT - குஜராத் அணியின் தொடக்கம்
டாஸ் வென்ற நிலையில் குஜராத் அணி முதலில் களமிறங்கியது. அந்த அணிக்கு தொடக்கமே எதிர்பார்த்த அளவிற்கு கிடைக்கவில்லை. ஷுப்மான் கில் ரன் ஏதும் ஆடிக்காமலே ஆட்டமிழந்தார். இருப்பினும் தொடக்க வீரர் சாஹா ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா நிதானமாக ரன்களை குவிக்க தொடங்கினார். இந்த இருவரும் 68 ரன்களை குவித்தனர். சாஹா 37 பந்துகளில் 47 ரன்களை குவித்தார். அடுத்தாக வந்த விஜய் சங்கர் 12 பந்துகளில் 10 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியா 50 பந்துகளுக்கு 66 ரன்களும், மில்லர் 12 பந்துகளுக்கு 6 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். இந்நிலையில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்களை பறிகொடுத்து 135 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
IPL 2023 LSG vs GT - தோல்வியை சந்தித்த லக்னோ
இதனையடுத்து 136 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணியானது விளையாட தொடங்கியது. லக்னோ அணிக்கு தொடக்கமே சிறப்பாக அமைந்தது. 7 வது ஓவரில் கைல் மேயர்ஸ் 24 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து அந்த அணிக்கு 81 பந்துகளுக்கு 81 ரன்கள் தேவைப்பட்டது. இதனை தொடர்ந்து குஜராத் அணியின் பந்து வீச்சாளர்கள் கடுமையான முறையில் பந்து வீசினர். கேஎல் ராகுல் 38 பந்துகளில் அரை சதம் அடித்தார். குர்னால் பாண்டியா 23 ரன்களும், பூரன் 1 ரன்னில் ஆட்டமிழக்க அணியின் மீது அழுத்தும் அதிகரித்தது. இந்நிலையில் கடைசி 2 ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது . அடுத்ததாக வந்த வீரர்கள் தனது விக்கெட்டை பறிகொடுத்ததால் குஜராத் அணி 7 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணியை வென்றது.