IPL 2023 LSG vs SRH: ஹைதராபாத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய லக்னோ
IPL 2023 LSG vs SRH: ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது.
ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. இந்த போட்டியானது லக்னோவில் உள்ள பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய ஹைதராபாத் அணி தொடக்கம் முதலே தான் நினைத்ததை போல் நன்றாக விளையாடி வந்த நிலையில் பவர்ப்ளேவிற்கு பிறகு போட்டி முழுவதும் லக்னோ அணிக்கு சாதகமாக திரும்பியது. அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து கொண்டிருந்தது. அதன்படி ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மயங்க் அகர்வால் மற்றும் அன்மோல்பிரீத் இருவரும் விளையாடினர். இதில் மயங்க் அகர்வால் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து ராகுல் திரிபாதி களமிறங்கினார். அன்மோல்பிரீத் சிங் 31 ரங்களும், ஹாரி ப்ரூக் 3 ரங்களும், ராகுல் திரிபாதி 34 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். ஹைதராபாத் அணி கடைசியாக 8 விக்கெட்களை இழந்து 121 ரன்களை எடுத்து.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய லக்னோ அணி 16 ஓவர் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 127 ரன்களை எடுத்து. இதன்முலம் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கே.எல்.ராகுல். 31 பந்தில் 35 ரன்களை எடுத்து தனது ஆட்டத்தை பறிகொடுத்தார். பௌலிங்கிலும் அசத்திய குர்னல் பாண்டியா பேட்டிங்கிலும் அசத்தினார். இந்நிலையில் 23 பந்தில் 34 ரன்களை குவித்தார். லக்னோ அணி இலக்கை எட்டும் நிலையில் மார்கஸ் ஸ்டைனஸ் 10 ரங்களும், பூரான் 11 ரன்களை எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்நிலையில் லக்னோ அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றுள்ளது.