IPL 2023 MI vs DC: 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ்

தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் இதுவரை வெற்றியை காணாத அணிகள் என்றால் அது ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய இந்த இரண்டு அணிகளும் இதுவரை வெற்றி கணக்கை தொடரவில்லை. இந்நிலையில் நேற்று நடைபெற்ற தொடரில் மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

IPL 2023 MI vs DC: டெல்லி அணியின் தொடக்கம்

அதன்படி டெல்லி அணியின் இன்னிங்சை கேப்டன் டேவிட் வார்னரும், பிரித்வி ஷாவும் தொடங்கினர். இருவரும் தங்களுக்கு கிடைத்த பந்துகளை தொடக்கம் முதலே பவுண்டரிக்கு விரட்டினர். இந்த தொடர் முழுவதும் சொதப்பி வந்த பிரித்வி ஷா தனது விக்கெட்டை இழந்தார்.

அதன்பிறகு வார்னருடன் கைகோர்த்து விளையாடினார் மணீஷ் பாண்டே. ஆனால் பியூஷ் சாவ்லாவிடம் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பிறகு டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து தோல்வியடைந்தனர். இதனால் அணியின் ரன்ரேட் குறைந்தது. வார்னர் மட்டும் நிதானமாக விளையாடினார். டெல்லி அணி 100 ரன்களை எடுப்பதற்கு தடுமாறியது. . மும்பை அணியின் சிறப்பான பந்து வீச்சுக்கு தாக்குபிடிக்காத டெல்லி அணி 19.4 ஓவரில் 172 ரன்களுக்கு ஆல் – அவுட் ஆனது.

IPL 2023 MI vs DC: மும்பை அணியின் முதல் வெற்றி

அதன்பின் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, முதல் ஓவரிலேயே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் அதிரடியாக ஆடினர்.

பவர்ப்ளே முடிவில் மும்பை அணி 68 ரன்கள் எடுத்து. அதன் பிறகு ரோஹித் சர்மாவின் அவசரத்தால் இஷான் கிஷன் தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். இவரை தொடர்ந்து திலக் வர்மா களம் இறங்கியதால் ஆட்டம் சூடுபிடித்தது. இருவரும் பவுண்டரி அடிக்க, ரன் நன்றாக உயர்ந்தது. ரோஹித் சர்மா 29 பந்துகளில் அரைசதம் அடித்தார். 16வது ஓவரை இம்பேக்ட் ப்ளேயர் முகேஷ் குமார் வீசினார். அந்த ஓவரின் 5வது பந்தில் சூர்ய குமார் யாதவ் 29 பந்துகளில் 41 ரன்களை எடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.

இதனையடுத்து ரோஹித் சர்மா 45 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார். இதனால் போட்டி சற்று விறுவிறுப்பாக இருந்தது. 20-வது ஓவரின் கடைசி பந்தில் டிம் டேவிட்டும் மற்றும் கேம்ரூம் கிரீனும் ஓடி ரன் எடுத்து வெற்றி பெற்றனர். மும்பை அணி 173 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றி இந்த சீசனில் மும்பையின் முதல் வெற்றியாகும்.

Latest Slideshows

Leave a Reply