IPL 2023 MI vs KKR: கொல்கத்தாவை துவம்சம் செய்த மும்பை இந்தியன்ஸ்
கொல்கத்தா அணியுடனான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 186 என்ற கடின இலக்கை மிகவும் எளிதாக 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது வெற்றியை ருசித்தது.
ஐ.பி.எல். போட்டியின் இன்றைய ஆட்டத்தின் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை அணியும் நிதிஷ் ரானா தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் சூர்யகுமார் கொல்கத்தா அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இந்த போட்டியில் முதல் முறையாக சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகமானார். கேப்டன் ரோஹித் சர்மா impact player ஆக களம் இறங்கினார்.
IPL 2023 MI vs KKR - வெங்கடேஷ் ஐயரின் ருத்ர தாண்டவம்
தனது பேட்டிங்கை வழக்கம் போல துவங்கிய கொல்கத்தா அணி இரண்டாவது ஓவரிலேயே அதிரடி ஆட்டக்காரர் குர்பாஸ் விக்கெட்டை இழந்தது. முதல் ஓவரை அறிமுக வீரர் அர்ஜுன் டெண்டுல்கர் சிறப்பாக வீசினார். பின்னர் ஆட வந்த வெங்கடேஷ் ஐயர் அனைத்து பந்துகளையும் சிக்ஸரும் பவுண்டரியுமாக விளாசி கொண்டே இருந்தார். மறுமுனையில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. பின்னர் கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ரானாவும் சொற்ப ரன்னில் வெளியேறினார்.
மறுமுனையில், அதிரடியாக ஆடிய ஐயர் 23 பந்தில் தனது அரைசதத்தினை கடந்தார். மைதானத்தின் நான்கு பக்கங்களிலும் சிக்ஸர் மழையை பொழிந்தார். இதனால் கொல்கத்தா அணியின் ஸ்கோர் மலமலவென உயர்ந்தது. இறுதியில் ருத்ர தாண்டவம் ஆடிய ஐயர் 49 பந்தில் சதம் விளாசினார். மொத்தம் 104 ரன்கள் குவித்த அவர் 6 பவுண்டரியும் 9 சிக்சருமாக ரன் மழையை பொழிந்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 185 ரன்கள் அடித்தது. கொல்கத்தா சார்பில் வெங்கடேஷ் ஐயர் 104 ரன்களும், ரிங்கு 18 மற்றும் ரஸல் 21 ரன்களும் சேர்த்தனர். மும்பை அணி சார்பில் ஸ்பின் பவுலர் ரித்திக் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
IPL 2023 MI vs KKR - மும்பை வெறித்தனம்
கடின இலக்கை நோக்கி மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய இருவரும் சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாசினர். மும்பை அணி பவர்பிளேயில் மட்டும் 72 ரன்கள் குவித்தது. இடையில் ரோஹித் அதிரடியாக 20 ரன்கள் குவித்து வெளியேற அடுத்து வந்த கேப்டன் சூரியகுமார் யாதவும் சிறப்பாக ஆட இதற்கிடையில் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த இஷான் கிஷன் 58 ரன்கள் குவித்தார். இஷான் 5 சிக்சர் மற்றும் 5 பவுண்டரிகள் என அசுரத்தனமாக ஆடினார்.
அடுத்து இளம் வீரர் திலக் வர்மா களமிறங்கி அதிரடியாக விளையாடினார். மறுமுனையில் சூர்யகுமார் யாதவ் கொல்கத்தா அணி வீரர்களின் பவுலர்களை சிதறடித்தார். எதிர்பாராத விதமாக திலக் வர்மா அவுட் ஆக, அடுத்து வந்த டிம் டேவிட் தனது பங்குக்கு சிக்ஸர்களாக விளாச மும்பை இந்தியன்ஸ் அணி 186 ரன் இலக்கை 14 பந்துகளை மீதம் வைத்து போட்டியை வென்றது.
கொல்கத்தா அணியில் இளம் வீரர் சுயாஷ் 2 விக்கெட்கள் வீழ்த்தினார். இது மும்பை அணிக்கு இரண்டாவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக இரண்டு தோல்விக்கு பிறகு மும்பை அணி கடந்த 2 போட்டியிலும் வென்றுள்ளது.
IPL 2023 MI vs KKR - AWARDS:
- Player Of The Match: Venkatesh Iyer
- EV Electric Striker Of The Match: Ishan Kishan
- Catch Of The Match: Hrithik Shokeen
- Longest six: Tim David
- RuPay On-The-Go 4s: Venkatesh Iyer
- Valuable Asset Of The Match: Venkatesh Iyer
- Dream 11 Game changer Of The Match: Venkatesh Iyer