IPL 2023 MI vs RCB: 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி

54 வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி.

IPL 2023 MI vs RCB: மும்பை இந்தியன்ஸ் IX

இஷான் கிஷன், ரோஹித் சர்மா, சூரியகுமார் யாதவ், நேஹால் வதேரா, டிம் டேவிட், கேமரூன் கிரீன், கிறிஜ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், குமார் கார்த்திகேயா, ஆகாஷ் மத்வால்.

IPL 2023 MI vs RCB: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு IX

விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ், அனுஜ் ராவத், கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோமரோர், தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், வனிந்து ஹசரங்க, ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ், வைஷாக் விஜய் குமார், ஹர்ஷர் படேல்.

IPL தொடரின் 54 வது ஆட்டமானது மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

IPL 2023 MI vs RCB - பெங்களூரு அணியின் தொடக்கம்

பெங்களூரு அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக வந்த அனுஜ் ராவத் 6 ரன்களில் வெளியேறினார். மேக்ஸ்வெல் கேப்டன் டு பிளெஸ்சிசுடன் இணைந்து 68 ரன்களுடன் வெளியேறினார். இருவரும் இணைந்து 120 ரன்களை சேர்த்தனர். அடுத்ததாக வந்த மஹிபால் லோமரோர் ஒரு ரன்னில் வெளியேற, பிளெசிஸ் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து 199 ரன்களை எடுத்தது. மும்பை அணி தரப்பில் பெஹ்ரன்டோர்ஃப் 3 விக்கெட்டுகளையும், கேமரூன் கிரீன், கிறிஜ் ஜோர்டான், குமார் கார்த்திகேயா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

IPL 2023 MI vs RCB - மும்பை அணியின் வெற்றி

200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் விளையாடிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா 7 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான இஷான் கிஷன் 42 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து சூர்யகுமார் யாதவ் மற்றும் நேஹால் வதேரா இருவரும் இணைந்து விளையாடி அணியை வெற்றியை நோக்கி நகர்த்தினர். இதில் சூரியகுமார் யாதவ் 83 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்ததாக வந்த டிம் டேவிட் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். நேஹால் வதேரா சிக்சர் அடித்து அணியை வேற்றி பாதைக்கு கொண்டு சென்றார். 16.3 ஓவரில் மும்பை அணி 4 விக்கெட்களை இழந்து 200 ரன்களை குவித்து மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நேஹால் வதேரா 52 ரன்னுடனும் மற்றும் கேமரூன் கிரீன் 2 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களமிறங்கினர்.

Latest Slideshows

Leave a Reply