IPL 2023 PBKS vs MI: மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
மும்பை அணியின் அதிரடியான விளையாட்டால் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 வித்தியாசத்தில் வீழ்த்தியது.
IPL 2023 PBKS vs MI: மும்பை இந்தியன்ஸ் IX
ரோஹித் சர்மா, இஷான் கிஷன், கேமரூன் கிரீன், சூரியகுமார் யாதவ், டிம் டேவிட், திலக் வர்மா, நேஹால் வதேரா, அர்ஷத் கான், பியூஷ் சாவ்லா, குமார் கார்த்திகேயா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆகாஷ் மத்வால்.
IPL 2023 PBKS vs MI: பஞ்சாப் கிங்ஸ் IX
பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான், மேத்யூ ஷார்ட், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, சாம் கர்ரன், ஷாருக் கான், ஹெர்ப்ரீத் ப்ரார், ரிஷி தவான், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லிஸ்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய இரு அணிகள் மோதின. இதில் மும்பை அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
IPL 2023 PBKS vs MI - பஞ்சாப் அணியின் அதிரடி
பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் பிரப்சிம்ரன் சிங் இருவரும் களமிறங்கினர். தொடக்கத்தில் பிரப்சிம்ரன் சிங் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக வந்த ஷிகர் தவான் 30 ரன்களும், மேத்யூ ஷார்ட் 27 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த லியாம் லிவிங்ஸ்டோன் மற்றும் ஜிதேஷ் சர்மா இருவரும் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். லிவிங்ஸ்டோன் 32 பந்துகளில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய லிவிங்ஸ்டோன், ஆர்ச்சர் வீசிய ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்களை விளாசினார்.
கொடுக்கப்பட்ட 20 ஓவரில் பஞ்சாப் அணி 214 ரன்களை குவித்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஜிதேஷ் சர்மா 49 ரன்களும், லிவிங்ஸ்டோன் 82 ரன்களும் எடுத்தனர். 215 ரன்களை எதிர்த்து மும்பை அணி விளையாடியது.
IPL 2023 PBKS vs MI - மும்பை அணியின் அபார வெற்றி
மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் இருவரும் களமிறங்கினர். இதில் ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்கவில்லை. அடுத்து வந்த கேமரூன் கிரீன் 23 ரன்களில் வெளியேறினார். சூரியகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் இருவரும் இணைந்து நின்று விளையாடி அணியின் ரன் வேகத்தை உயர்த்தினர்.
சூரியகுமார் யாதவ் 66 ரன்களும், இஷான் கிஷன் 71 ரங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் திலக் வர்மா 3 சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார். மும்பை அணி 216 ரன்களை எடுத்து பஞ்சாப் அணியை வீழ்த்தியது.