IPL 2023 Qualifier 1 CSK vs GT: 10 வது முறையாக ஐ.பி.எல் பைனலில் நுழைந்த சென்னை

முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை அணி குஜராத் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி  10வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து சாதனை படைத்தது.

IPL 2023 Qualifier 1 CSK vs GT - சென்னை பேட்டிங் :

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அரங்கேறிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. சென்னை அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்த ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வே ஜோடியில், ருதுராஜ் அரைசதம் அடித்து அசத்தினார். ருதுராஜ் கெய்க்வாட்  60 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சிக்ஸர் மன்னன் ஷிவம் துபே ஒரு ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

அடுத்து வந்த ரஹானே 17 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடக்கம் முதலே டைமிங் கிடைக்காமல் போராடிய  கான்வே 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராயுடுவும் 17 ரன்னில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து கேப்டன் தோனியும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அவர் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

களத்தில் இருந்த மொயீன் அலி ஒரு சிக்ஸருடன் 9 ரன்களும், ஜடேஜா 22 ரன்களும் எடுத்தனர். ஜடேஜா கடைசி பந்தில் அவுட் ஆக இறுதியில், 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு சென்னை அணி 172 ரன்கள் எடுத்தது. குஜராத் அணி தரப்பில், ஷமி மற்றும் மோகித் சர்மா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

IPL 2023 Qualifier 1 CSK vs GT - குஜராத் பேட்டிங் :

தொடர்ந்து 173 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. தொடக்க வீரர் விருத்திமான் சாஹா 12 ரன்னிலும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 8 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். குறிப்பாக சுழலில் மிரட்டிய  ஜடேஜா – தீக்ஷனா ஜோடி குஜராத் டாப் ஆர்டரை திணறடித்தனர்.

இதனிடையில் அடிக்கடி பவுண்டரிகளை விரட்டி நெருக்கடி கொடுத்த ஷுப்மன் கில் தீபக் சாஹர் பந்தில்  கான்வே கையில் கேட்ச் ஆனார். ஷனகா மற்றும் விஜய் சங்கர் சிறிது நேரம் ஜோடி அமைந்த நிலையில், மதீஷா பத்திரனா பந்தை விரட்ட  முயன்று விஜய் சங்கர் ,ருதுராஜ் வசம் கேட்ச் ஆனார். அடுத்து ஷனகா ஜடேஜாவின் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயற்சித்து தீக்ஷனா வசம் கேட்ச் ஆனார்.

இவ்வாறு ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபுறம் குஜராத் வீரர்கள் ரன்களை எடுத்துக்கொண்டே இருந்தனர். கடைசி ஓவரில் குஜராத் 27 ரன்கள் தேவைபட்ட நிலையில், அந்த ஓவரை சிறப்பாக வீசிய பத்திரனா தனது கடைசி பந்தில் ஷமியின் விக்கெட்டை கைப்பற்றினார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த குஜராத் அணி 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், சென்னை அணி குஜராத்தை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 10வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து சாதனை படைத்தது.

IPL 2023 Qualifier 1 CSK vs GT AWARDS :

  • ev Electric Striker Of The Match – Rashid Khan
  • Herbalife Active Catch Of The Match – Ruturaj Gaikwad
  • Visit Saudi Beyond The Boundaries Longest 6 – Rashid Khan
  • RuPay On-The-Go 4s – Ruturaj Gaikwad
  • UPSTOX Most Valuable Asset Of The Match – Ravindra Jadeja
  • Dream11 Gamechanger Of The Match – Ravindra Jadeja

Latest Slideshows

Leave a Reply