IPL 2023 Qualifier 2 GT vs MI: குஜராத் அணியின் அதிரடி… மும்பையை வீழ்த்தி இறுதி போட்டிக்குள்ள நுழைந்த குஜராத்

நேற்று நடந்த போட்டியில் மும்பை அணியை எதிர்கொண்ட குஜராத் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

IPL 2023 Qualifier 2: குஜராத் டைட்டன்ஸ் IX

விருத்திமான் சாஹா, சுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா,ரஷித் கான், விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, மோஹித் சர்மா, நூர் அகமது, முகமது ஷமி, ஜோசுவா லிட்டில்.

IPL 2023 Qualifier 2: மும்பை இந்தியன்ஸ் IX

ரோஹித் சர்மா, நேஹால் வதேரா, கேமரூன் கிரீன், சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, விஷ்ணு வினோத், டிம் டேவிட், கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, குமார் கார்த்திகேயா, ஜேசன் பெஹரேண்டோர்ஃப், இஷான் கிஷன், ஆகாஷ் மத்வால்.

அகமதாபாத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

IPL 2023 Qualifier 2 குஜராத் அணியின் அதிரடி

இதன்படி குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விருத்திமான் சாஹா மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். இதில் விருத்திமான் சாஹா 18 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக வந்த சாய் சுதர்சனுடன் இணைந்து சுப்மன் கில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடிய சுப்மன் கில் 60 பந்துகளில் 120 ரன்களை எடுத்து வெளியேறினார். சாய் சுதர்சன் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து விளையாடிய ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 28 ரன்களும் ரஷித் கான் 5 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். குஜராத் அணி கொடுக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்களை இழந்து 233 ரன்களை குவித்தது.

IPL 2023 Qualifier 2 மும்பை அணியின் தோல்வி

234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, நேஹால் வதேரா இருவரும் களமிறங்கினர். வதேரா 4 ரன்னும், ரோஹித் சர்மா 2 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்ததாக களமிறங்கிய கேமரூன் கிரீன் 30 ரன்களும் எடுத்தார். இவரை தொடர்ந்து சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடிய சூர்யகுமார் யாதவ் 61 ரன்களும் திலக் வர்மா 43 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து வந்த வீரர்கள் யாரும் எதிர்பார்த்த அளவிற்கு யாரும் ரன் ஏதும் எடுக்கவில்லை. இறுதியில் மும்பை அணி 18.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்து 171 ரன்கள் மட்டுமே எடுத்தது.

IPL 2023 Qualifier 2 குஜராத் அணியின் அபார வெற்றி

மும்பை அணி 171 ரன்கள் எடுத்ததால் 62 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. சிறப்பாக பந்துவீசிய மோஹித் ஷர்மா 2.2 ஓவரில் 10 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியில் வெற்றி பெற்றதால் IPL தொடரின் இறுதி போட்டிக்கு குஜராத் அணி தேர்வாகியுள்ளது. நாளை அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகள் எதிர்கொள்ள உள்ளன.

Latest Slideshows

Leave a Reply