IPL 2023 RCB vs CSK: சின்னசாமி ஸ்டேடியத்தில் ரன் மழை!

  • சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து 226 ரன்கள் எடுத்தது.பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  • IPL 2023 RCB vs CSK:  ஐபிஎல் தொடர்களில் மிகவும் முக்கியமான போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியும் ஒன்று. இந்த முறை இரண்டு அணிகளும் வெவ்வேறு பிரிவில் இடம் பெற்றுள்ளதால் ஒரு முறை மட்டுமே லீக் சுற்றில் இரு அணிகளும் மோதும். இந்த போட்டி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் தொடங்கியது.

IPL 2023 RCB vs CSK - சென்னை மிரட்டல்

  • இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி சென்னையை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. இந்த மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம் என்பதால் சேஸ் செய்யும் அணி அதிகம் வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு அணி இந்த முடிவினை எடுத்தது. தொடக்க வீரர்களாக ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் டேவன்  கான்வே ஆட வந்தனர். ருத்துராஜ் கெய்க்வாட் 3 ரன்களில் ஏமாற்றினார். அதற்கு பின்னர் களமிறங்கிய ரஹானே வெறித்தனமாக ஆட, சென்னை அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
  • இரு வீரர்களும் இணைந்து பவர்ப்ளேயில் சிறப்பான தொடக்கம் தந்தனர். இவர்கள் பெங்களூரு அணியின் பந்து வீச்சை சிதறடித்தனர். ரஹானே ஹரசங்கா பந்தில் க்ளீன் போல்டு ஆகி வெளியேறினார். பின்னர் வந்த ஷிவம் டூபே வெளுத்து வாங்க சென்னை அணி 14 ஓவர்களில் 150 ரன்களை கடந்தது. ஆரம்பம் முதல் அதிரடியாக ஆடிய கான்வே அரைசதம் கடந்தார். ஆனால் அவர் 83 ரன்கள் குவித்த நிலையில் ஹர்ஷல் பட்டேல் பந்தில் போல்டு ஆனார்.
  • மறுமுனையில் இருந்த தூபே 25 பந்துகளில் 50 ரன்கள் விளாசி தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதில் ஒரு சிக்ஸரை 111 மீட்டருக்கு பறக்கவிட்டார். இறுதியில் சென்னை அணி அனைத்து ஓவர்கள் முடிவில் 226 ரன்கள் குவித்தது.

IPL 2023 RCB vs CSK - மரண பயம் காட்டிய பெங்களூரு

  • தொடர்ந்து 227 ரன்கள் என்ற மிக கடின இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணி நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி 6 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அடுத்து ஆட வந்த லோம்ரோர் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினர்.
  • அடுத்து ஜோடி சேர்ந்த ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் சென்னை அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். சென்னை பவுலர்கள் விக்கெட் வீழ்த்த போராடினர். இருப்பினும் இந்த ஜோடி அபாரமாக சிக்ஸர்களை பறக்கவிட்டு மிரட்டினர். அந்த நேரத்தில் தீக்ஷனாவின் பந்தில் மேக்ஸ்வெல் 76 ரன்கள் எடுத்த நிலையில் கேப்டன் தோனியிடம் பிடிபட்டார்.
  • சற்று நேரத்தில் 62 ரன்கள் எடுத்த டு பிளெசிஸ், ஸ்பின் பவுலர் மொயின் அலி வீசிய ஓவரில் அவுட் ஆகி வெளியேறினர். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் ஒரு சிக்ஸர் 3 பவுண்டரிகளை விரட்டினார்.இருப்பினும் அது வெற்றிக்கு போதுமானதாக இல்லை. பெங்களுரு அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இளம் வீரர் பத்திரனா சிறப்பாக வீசினார். இதனால் பெங்களூரு அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

IPL 2023 RCB vs CSK - AWARDS

  • Player Of The Match: Devon Conway
  • EV Electric Striker Of The Match: Glenn Maxwell
  • Herbalife Active Catch Of The Match: Wayne Parnell
  • Visit Saudi Beyond The Boundaries Longest 6: Shivam Dube
  • RuPay On-The-Go 4s: Devon Conway
  • UPSTOX Most Valuable Asset Of The Match: Glenn Maxwell 
  • Dream11 Gamechanger Of The Match: Glenn Maxwell

Latest Slideshows

Leave a Reply