IPL 2023 RCB vs KKR: 21 ரன் வித்தியாசத்தில் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கொல்கத்தா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு அணியையை 21 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐபிஎல் போட்டியில் வெற்றிப் பாதைக்கு திரும்பியது.

IPL 2023 RCB vs KKR : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் IX

வெங்கடேச ஐயர், நிதிஷ் ராணா, ஜேசன் ராய், ரிங்கு சிங், நாராயண் ஜெகதீசன், சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல், வைபவ் அரோரா, சுயாஷ் சர்மா, டேவிட் வைஸ், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.

IPL 2023 KKR vs RCB : ராயல் சேலஞ்சரஸ் பெங்களூரு IX

விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோமரோர், ஃபாஃப் டு பிளெசிஸ், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக், வைசாக் விஜய் குமார், முகமது சிராஜ், ஹர்ஷல் படேல், சுயாஷ் பிரபுதேசாய், வனிந்து ஹசரங்க, டேவிட் வில்லி.

பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

IPL 2023 RCB vs KKR - கொல்கத்தா அணியின் தொடக்கம்

பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்யப்பட்ட நிலையில் கொல்கத்தா அணி களமிறங்கியது. அதன்படி கொல்கத்தா அணி சார்பில் ஜேசன் ராய் மற்றும் நாராயண் ஜெகதீசன் இருவரும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினர். இதில் ஜெகதீசன் 29 பந்துகளில் 27 ரன்களை குவித்து வெளியேறினார். அதிரடியாக விளையாடிய ஜேசன் ராய் 29 பந்துகளுக்கு அரை சதம் அடித்து 56 ரன்களை குவித்தார். இதனை தொடர்ந்து விளையாடிய நிதிஷ் ராணா 21 பந்துகளுக்கு 48 ரன்களை குவித்தார். அடுத்ததாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 26 பந்துகளில் 31 ரன்களை குவித்து வெளியேறினார். அடுத்து டேவிட் வைஸ் 12 ரன்னும் ரிங்கு சிங் 18 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்நிலையில் நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 5 விக்கெட்களை இழந்து 200 ரன்களை குவித்தது.

IPL 2023 RCB vs KKR - பெங்களூரு அணியின் ஏமாற்றம்

இதனை தொடர்ந்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி சார்பாக அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ஃபாஃப் டு பிளெசிஸ் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதில் பிளெசிஸ் 17 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து விளையாடிய ஷாபாஸ் அகமது 2 ரன்களில் ஆட்டமிழந்தார். நிதார்ணமாக விளையாடிய கோலி அரை சதம் அடித்தார். லோமரோர் 18 பந்துகளுக்கு 34 ரன்களை குவித்தார். அடுத்ததாக விராட்கோலி 37 பந்துகளுக்கு 54 ரன்களை குவித்து வெளியேறினார். இதனை தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 179 குவித்தது. கொல்கத்தா அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Latest Slideshows

Leave a Reply