IPL 2023 RCB vs LSG: கடைசி பந்தில் லக்னோ அணி த்ரில் வெற்றி

16வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் விளையாடியது. இதில் லக்னோ அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் டு பிளெஸிஸ் மற்றும் விராட் கோலி இருவரும் தொடக்கம் முதலே ரன்களை குவிக்க தொடங்கிவிட்டனர்.

விராட் கோலி 44 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸருடன் 61 ரன்களை குவித்தார். ஒரு விக்கெட் விழுந்தபோது, ​​டு பிளெசிஸுடன் மேக்ஸ்வெல் இணைந்து அதிரடியாக ரன்களை எடுத்தார். இதனால் அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் எகிறியது.

29 பந்துகளை எதிர்கொண்ட மேக்ஸ்வெல் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். கேப்டன் டுபிளெசிஸ் கடைசி வரை 79 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். டு பிளெசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் ஜோடி சேர்ந்து 2வது விக்கெட்டிற்கு 50 பந்துகளுக்கு 115 ரன்களை எடுத்தனர். 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 2 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை எடுத்து. லக்னோ அணி 213 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது.

லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் கெய்ல் மேயர்ஸ் ஆகியோர் களமிறங்கினர். தொடக்க ஆட்டக்காரர் கைல் மேயர்ஸ் ரன் ஏதுவும் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

கேப்டன் கே.எல்.ராகுல் 18 ரன்களிலும், தீபக் ஹூடா 9 ரன்களிலும், க்ருணால் பாண்டியா ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினர். மார்கஸ் ஸ்டோனிஸ் 30 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்தார். விக்கெட் கீப்பர் நிக்கோலஸ் பூரன் 19 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்து பெங்களூரு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். அவருடன் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்த ஆயுஷ் படோனி கடைசி ஓவரில் 24 பந்துகளில் 30 ரன்களில் வெளியேறினார்.

கடைசி ஓவரில் ஆட்டம் பரபரப்பாக மாறியது. இறுதியில் லக்னோ அணி கடைசி பந்தில் 1 ரன் எடுத்து அசத்தியது.இதன் மூலம் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Latest Slideshows

Leave a Reply