IPL 2023 RCB vs MI: மும்பையை துவம்சம் செய்த பெங்களூரு

ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 31ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதன் 5வது லீக் போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இவற்றில் பலம் வாய்ந்த பெங்களூரு அணியும், ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியும் மோதின. போட்டி பெங்களூரு அணியின் சொந்த மைதானமான சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடங்கியது. மும்பை அணியில் நம்பர் 1 பவுலர் பும்ரா இல்லாதது குறிப்பிடத்தக்கது.

IPL 2023 RCB vs MI - RCB டாஸ் வெற்றி

உள்ளூர் ரசிகர்களின் ஆதரவில் களமிறங்கிய பெங்களூரு அணி டாஸ் ஜெயித்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் இறங்கிய மும்பை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் ரோஹித் ஷர்மா 1 ரன்னிலும், இஷான் கிஷன் 10 ரன்களிலும் வெளியேறினர். மும்பை அணியால் 16 கோடிக்கு வாங்கப்பட்ட ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீன் 5 ரன்களில் வெளியேறி ஏமாற்றினார். இவர் பெங்களூரு அணி பவுலர் டாப்லியின் பிரமாதமான இன்ஸ்விங் பந்தில் போல்டு ஆனார். அடுத்து ஆட வந்த நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் 15 ரன்களில் வெளியேற மும்பை அணி 48 ரன்னில் 4 விக்கெட் என தடுமாறியது.

கடந்த சீசனில் மும்பை அணிக்கு ஒரே ஆறுதலாக இருந்த திலக் வர்மா அதே உத்வேகத்துடன் விளையாடினார். அவர் பெங்களூரு அணியின் அனைத்து பவுலரையும் சிதறடித்தார். அவர் 46 பந்துகளில் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 171 ரன்கள் எடுத்தது. இது நல்ல பேட்டிங் ஆடுகளமான பெங்களுருவில் போதுமானதாக இல்லை.

IPL 2023 RCB vs MI - விராட் அபாரம்

அடுத்து இலக்கை நோக்கி ஆட வந்த கோலி மற்றும் டு பிளேஸிஸ் அபாரமாக ஆடினர். நான்கு மூலைகளிலும் பவுண்டரிகளாக பறக்கவிட்டனர். இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 148 ரன்கள் குவித்தனர். டு பிளேஸிஸ் 73 ரன்களும் விராட் 82 ரன்களும் குவித்து வெற்றியை உறுதி செய்தனர். இறுதியாக களமிறங்கிய மேக்ஸ்வெல் 2 சிக்ஸர் அடித்து மேட்சை முடித்து வைத்தார். சேஸ் மாஸ்டர் கோலி கடைசி வரை களத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

IPL 2023 RCB vs MI - பெங்களூரு வெற்றி

இதனால் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் 16.2 ஒவேர்களிலேயே எளிதாக இலக்கை எட்டியது. மும்பை அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோப்ரா ஆர்ச்சர் பெரிதாக சோபிக்கவில்லை.

ஆட்ட நாயகன் : டு பிளேஸிஸ்

சிறந்த ஸ்ட்ரைக் ரேட் : திலக் வர்மா

சிறந்த கேட்ச் : டு பிளேஸிஸ்

தொலைதூர சிக்ஸர் : வதேரா

அதிக பவுண்டரிகள் : திலக் வர்மா

மிகவும் மதிப்புமிக்க வீரர் : திலக் வர்மா

சோகம் தொடர்கிறது

கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து மும்பை அணி தனது முதல் போட்டியில் வெற்றி பெறாதது குறிப்பிடத்தக்கது. இதனால் மும்பை அணியை சாதாரணமாக எடை போட முடியாது. மும்பை அணிக்கு முதலில் தோற்று கடைசியில் ஜெயித்து சாம்பியன் பட்டம் வெல்வது புதிதல்ல.

MI vs CSK :

மும்பை அணியின் அடுத்த போட்டி தனது பரம எதிரியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஏப்ரல் 8ஆம் தேதி சந்திக்கிறது.

Latest Slideshows

Leave a Reply