IPL 2023 RCB vs SRH: 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அதிரடி வெற்றி

நேற்றிரவு நடந்த ஐபிஎல் தொடரில் நான்கு வருட நீண்ட காத்திருப்புக்கு பின் விராட் கோலியின் அதிரடி சதத்தால் பெங்களூரு அபார வெற்றி பெற்றது.

IPL 2023 RCB vs SRH: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு IX

விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ், கிளென் மேக்ஸ்வெல், மைக்கேல் பிரேஸ்வெல், மஹிபால் லோமரோர், அனுஜ் ராவத், ஹர்ஷல் படேல், வெய்ன் பார்னெல், ஷாபாஸ் அகமது, கரண் சர்மா, முகமது சிராஜ்.

IPL 2023 RCB vs SRH: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் IX

அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ராம், ஹென்ரிச் கிளாசென், ஹாரி புரூக், க்ளென் பிலிப்ஸ், அப்துல் சமத், நிதிஷ் குமார் ரெட்டி, மயங்க் தாகர், புவனேஸ்வர் குமார், கார்த்திக் தியாகி, டி.நடராஜன்.

நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

IPL 2023 RCB vs SRH - ஹைதராபாத் அணியின் தொடக்கம்

ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் ராகுல் திரிபாதி இருவரும் களமிறங்கி விளையாடினர். இதில் அபிஷேக் 14 பந்துகளுக்கு 11 ரன்களும், ராகுல் திரிபாதி 12 பந்துகளுக்கு 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனை தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஹென்ரிச் கிளாசென் 51 பந்துகளுக்கு சதம் அடித்து 104 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அடுத்தது விளையாடிய க்ளென் பிலிப்ஸ் 4 பந்துகளுக்கு 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹாரி புரூக் 17 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து அட்டமிழக்காமல் இருந்தார். கொடுக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 186 ரன்களை குவித்தது.

IPL 2023 RCB vs SRH - பெங்களூரு அணியின் அதிரடி வெற்றி

இதனை தொடர்ந்து 187 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பெங்களூரு அணி களமிறங்கியது. பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் ஃபாஃப் டு பிளெசிஸ் இருவரும் களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் அதிரடியாக விளையாடிய விராட் கோலி நீண்ட வருட காத்திருப்பிற்கு பின் தனது ஆறாவது சதத்தை பதிவு செய்து, தனது முன்னாள் சகா வீரர் கிறிஸ் கெயிலின் சாதனையை சமன் செய்தார். RCB அணியின் அதிரடியை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் SRH பந்து வீச்சாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். அடுத்தது விளையாடிய ஃபாஃப் டு பிளெசிஸ் 47 பந்துகளில் 71 ரன்களை எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்தது விளையாடிய கிளென் மேக்ஸ்வெல் 5 ரன்களும், மைக்கேல் பிரேஸ்வெல் 4 ரன்களும் எடுத்து அட்டமிழக்காமல் இருந்தனர். 19.2 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 2 விக்கெட்களை இழந்து 187 ரன்களை எடுத்து அதிரடி வெற்றி பெற்றது.

Latest Slideshows

Leave a Reply