IPL 2023 RR vs PBKS: ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 66 போட்டியில் பஞ்சாப் கிங்ஸை, ராஜஸ்தான் ராயல்ஸ் கடைசி ஓவரில் வீழ்த்தியது.

IPL 2023 RR vs PBKS: ராஜஸ்தான் ராயல்ஸ் IX

யஷஸ்வி ஜெய்ஸ்வால், பட்லர், தேவ்தட் படிக்கல், சஞ்சு சாம்சன், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், துருவ் ஜூரல், ட்ரெண்ட் போல்ட், ஆடம் ஜம்பா, நவதீப் சைனி, சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.

IPL 2023 RR vs PBKS: பஞ்சாப் கிங்ஸ் IX

பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான், அதர்வ தைடே, லியாம் லிவிங்ஸ்டன், சாம் கர்ரன், ஜிதேஷ் சர்மா, ஷாரு கான், ஹர்ப்ரீத் ப்ரார், ராகுல் சாஹர், கசிகோ ரபாடா, அர்ஷிதீப் சிங், நாதன் எல்லிஸ்.

தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

IPL 2023 RR vs PBKS - பஞ்சாப் அணியின் தொடக்கம்

பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் 2 பந்துகளில் 2 ரன்களை மட்டுமே எடுத்து ஏமாற்றத்தை அளித்து வெளியேறினார். இவரை தொடர்ந்து களமிறங்கிய அதர்வ தைடே 12 பந்துகளுக்கு 19 ரன்களும், ஷிகர் தவான் 12 பந்துகளில்17 ரன்களும் மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் 9 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து வந்த வீரர்கள் ஆட்டமிழந்து கொண்டே இருந்தனர். இதனை தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஜிதேஷ் சர்மா 28 பந்துகளில் 44 ரன்களை குவித்து ஆட்டமிழந்து வெளியேறினார். இவர்களை தொடர்ந்து ஷாரு கான் மற்றும் சாம் கர்ரன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஷாரு கான்41 ரன்களும், சாம் கர்ரன் 49 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட்களை 187 ரன்களை குவித்தது.

IPL 2023 RR vs PBKS - ராஜஸ்தான் அணியின் த்ரில் வெற்றி

இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் அணி 188 ரன்களை நோக்கி களமிறங்கியது. ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் இருவரும் களமிறங்கினர். இதில் பட்லர் 4 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்காமல் ஏமாற்றத்தை அளித்து வெளியேறினார். அடுத்தது அதிரடியாக விளையாடிய தேவ்தட் படிக்கல் 30 பந்துகளுக்கு அரைசதம் அடித்து 51 ரன்களிலும், சஞ்சு சாம்சன் 2 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்தது விளையாடிய ஜெய்ஸ்வால் அரை சதம் அடித்து வெளியேறினார். இவரை தொடர்ந்து விளையாடிய ரியான் பராக் 20 ரன்களில் வெளியேறினார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹெட்மியர் 46 ரன்களில் வெளியேறினார். இவர்களை தொடர்ந்து விளையாடிய துருவ் ஜூரல் 10 ரன்களும் ட்ரெண்ட் போல்ட் 1 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் அணி 19.4 ஓவரில் 6 விக்கெட்களை இழந்து 189 ரன்களை குவித்து த்ரில் வெற்றி பெற்றது.

Latest Slideshows

Leave a Reply