IPL 2023 SRH vs DC: 9 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஹைதராபாத்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

IPL 2023 SRH vs DC: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் IX

அபிஷேக் சர்மா, மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ராம், ஹாரி புரூக், ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமது, அகேல் ஹொசைன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்க்கண்டே, உம்ரான் மாலிக், டி.நடராஜன்.

IPL 2023 SRH vs DC: டெல்லி கேப்பிட்டல்ஸ் IX

டேவிட் வார்னர், பில் உப்பு, மிட்செல் மார்ஷ், மணீஷ் பாண்டே, பிரியம் கார்க், சர்பராஸ் கான், அக்சர் படேல், ரிபால் படேல், குல்தீப் யாதவ், அன்ரிச், நார்ட்ஜே, முகேஷ் குமார், இஷாந்த் சர்மா.

அருண் ஜெட்லீ மைதானத்தில் நடைபெற்ற இந்த மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

IPL 2023 SRH vs DC - ஹைதராபாத் அணியின் தொடக்கம்

ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் மயங்க அகர்வால் இருவரும் களமிறங்கினர். அகர்வால் 5 ரன்னிலும், அடுத்ததாக வந்த ராகுல் திரிபாதி 10 ரன்னிலும், கேப்டன் மார்க்ராம் 8 ரன்னிலும், ஹாரி புரூக் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா அதிரடியா விளையாடி 67 ரன்களை குவித்தார். ஹென்ரிச் கிளாசென் 53 ரன்களும், அப்துல் சமது 28 ரன்களும் எடுத்தனர். ஹைதராபாத் அணி கொடுக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 197 ரன்கள் எடுத்தது.

IPL 2023 SRH vs DC - டெல்லி அணியின் தோல்வி

198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து பில் உப்பு மற்றும் மிட்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்து இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பில் உப்பு 59 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக மிட்செல் மார்ஸ் 63 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த பிரியம் கார்க் 12 ரன்களிலும், சர்பராஸ் கான் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் ரிப்பிள் பட்டேல் 11 ரன்களும், அக்சர் பட்டேல் 29 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்தது. இதனால் ஹைதராபாத் அணி டெல்லி அணியை 9 ரான் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

Latest Slideshows

Leave a Reply