IPL 2023 SRH vs KKR: 23 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் வெற்றி
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் ஹைதராபாத் அணியும் மற்றும் கொல்கத்தா அணியும் . இதில் கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஐதராபாத் அணி முதலில் களமிறங்கியது.
IPL 2023 SRH vs KKR - ஐதராபாத் அணியின் தொடக்கம்;-
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மயங்க் அகர்வால் 13 பந்தில் 9 ரங்களும், அடுத்ததாக ராகுல் திரிபாதி 4 பந்தில் 9 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து இறங்கிய மார்க்ராம் அதிரடியாக விளையாடினர். அவர் 26 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உட்பட அரைசதம் அடித்து வெளியேறினார்.
மார்க்கும் , புரூக்க்கும் ஜோடி சேர்ந்து 72 ரன்கள் குவித்தனர். இதனை தொடர்ந்து அபிஷேக் சர்மா 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடக்க ஆட்டக்காரரான ஹாரி புரூக் பொறுப்புடன் விளையாடி அசத்தலான சதம் அடித்தார். புரூக் 55 பந்துகளில் 100 ரன்களும், கிளாசன் 16 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.இறுதியில் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 228 ரன்கள் குவித்தது.
IPL 2023 SRH vs KKR - வெற்றியை தழுவிய கொல்கத்தா:-
இதையடுத்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது இதில் ரகுமானுல்லா குர்பாஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயரும் சரியாக விளையாட வில்லை . அதாவது 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து வந்த சுனில் நரைன் வழக்கம் போல் இந்தப் போட்டியிலும் டக் அவுட்டானார்.
அடுத்ததாக நிதிஷ் ராணா களமிறங்கினார்.அவரும் ஜெகதீசனும் இணைந்து ரன் வேட்டையை தொடங்கினர். ஜெகதீசன் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து நம்பிக்கை நட்சத்திரமான ரிங்கு சிங்கு வந்தார். ஒருபுறம் கேப்டன் நிதிஷ் ராணா அதிரடி காட்டினார். தொடர்ந்து சிக்ஸர், பவுண்டரிகளை விரட்டினார். 25 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார். இவர் 75 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து நம்பிக்கையை கைவிடாமல் விளையாடிய ரிங்கு சிங்கு 27 பந்துகளில் அரை சதத்தை கடந்தார்.
ஆனால் அணியின் வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி ஓவரை உம்ரான் மாலிக் வீசினார் இதில் இவர் 1 விக்கெட்டை வீழ்த்தி 8 ரன்களை மட்டுமே கொடுத்தார். ஆட்டமிழக்காமல் இருந்த ரிங்கு சிங்கு 58 ரன்களை குவித்தார். 20 ஓவர் முடிவில் 205 ரன்களை எடுத்தது. இதனால் ஹைதராபாத் அணி 23 ரன்களில் வெற்றி பெற்றது.