IPL 2023 SRH vs MI: ஐதராபாத் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் ஹாட்ரிக் வெற்றி!

கிரீன், திலக் வர்மா அதிரடியில் 192 ரன்களை குவித்தது மும்பை அணி. இதனால் 14 ரன்களில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி.

IPL 2023 SRH vs MI - சன் ரைசர்ஸ் ஐதராபாத் IX:

மயங்க் அகர்வால், ஹாரி புரூக், ராகுல் திரிபாதி, மார்க்ரம் , ஹென்ரிச் கிளாசென் , அபிஷேக் சர்மா, வாஷிங்டன் சுந்தர், மார்கோ யான்சன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, நடராஜன்.

IPL 2023 SRH vs MI - மும்பை இந்தியன்ஸ் IX:

ரோகித் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், கேமரூன் கிரீன், அர்ஜுன் டெண்டுல்கர், நேஹால் வதேரா, ரித்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்.

IPL 2023 SRH vs MI - ஐதராபாத்தில் ஆரம்பம் :

ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற 25-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகளும் மோதின. இரு அணிகளும் புள்ளி பட்டியலில் கடைசியில் இருப்பதால் இந்த போட்டியின் வெற்றி இரு அணிகளுக்கும் மிக அவசியமான ஒன்றாகும்.இதனால் இந்த போட்டி பெரும் பரபரப்பிற்கு மத்தியில் ஆரம்பித்தது.

IPL 2023 SRH vs MI - மும்பை இந்தியன்ஸ் அதிரடி :

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் மார்க்ரம்  மும்பை அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்

இதன்படி மும்பை அணியின் தொடக்க வீரர்களாக அதிரடி ஆட்டக்காரர் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் ஆட வந்தனர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக அடித்து ஆடினார். கேப்டன் ரோகித் சர்மா பவுண்டரிகளாக விளாசினர். சிறப்பாக ஆடிய ரோஹித் 28 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவரது விக்கெட்டை நடராஜன் சிறப்பான கட்டர் பந்தில் வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய கீரின் முதலில் மெதுவாக ஆடி ரன் சேர்த்தார். இதற்கு இடையே சிறப்பாக ஆடி வந்த கிஷன் 38 ரன்களில் அவுட் ஆனார்.

அடுத்து ஆட வந்த சூர்யகுமார் யாதவ் 7 ரன்களில் வெளியேறி ஏமாற்றினார். இந்த நிலையில் கிரீன் மற்றும் திலக் வர்மா ஜோடி சேர்ந்தனர். இருவரும் ஹைதராபாத் அணி பந்துவீச்சை விளாசினார். 17 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட கிரீன் அரைசதம் அடித்து அசத்தினார். அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்த போது எதிர்பாராமல் திலக் வர்மா அவுட் ஆகி வெளியேறினார். அவர் குறைந்த பந்துகளில் 37 ரன்கள் விளாசினார். அடுத்து ஆட வந்த அதிரடி ஆட்டக்காரர் டிம் டேவிட் 16 ரன்கள் எடுக்க, கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார்.

கிரீன் கடைசி வரை 64 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதனால் மும்பை அனைத்து ஓவர்கள் முடிவில் 192 ரன்கள் சேர்த்தது. ஹைதராபாத் அணியை பொறுத்தவரை யான்சன் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

IPL 2023 SRH vs MI - ஹைதராபாத் தடுமாற்றம்:

ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான புரூக் மற்றும் அகர்வால் களமிறங்கினர். கடந்த போட்டியில் சதம் அடித்த ஹாரி புரூக் 9 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து ஆட வந்த  திரிபாதி 7 ரன்களில் வெளியேற ஐதராபாத் அணி தடுமாறியது. மறுமுனையில் மயங்க் அகர்வால் சற்று பொறுமையாக ஆடி வந்தார். ஹைதராபாத் அணி 25 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது . அடுத்து வந்த கேப்டன் மார்க்ரம் நிதானமாக விளையாடினார். ஆனால் இலக்கு அதிகம் என்பதால் அடித்து ஆட முயன்று 22 ரன்களில் மார்க்ரம் அவுட் ஆனார். அடுத்து வந்த இளம் வீரர் அபிஷேக் ஷர்மா 1 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய தென்னாபிரிக்க வீரர் கிளாசன் மும்பை பந்துவீச்சை சிதறடித்தார். இதனால் அணியின்ஸ்கோர் மலமலவென உயர்ந்தது. இதனால் வெற்றி ஐதராபாத் அணி பக்கம் திரும்பியது. ஆனால் அதிரடியாக ஆடி வந்த கிளாசன் 36 ரன்களில் வெளியேற போட்டி திடீரென மாறியது. கடைசி ஓவரில் ஹைதராபாத் அணிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டபோது, அந்த ஓவரை இளம் வீரர் அர்ஜூன் டெண்டுல்கர் வீசினார்.அவர் அருமையாக யார்கர் பந்துகளாக வீச ஹைதராபாத் அணி 10 விக்கெட்களையும் இழந்து 178 ரன்கள் மட்டுமே எடுத்தது.  மும்பை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  இந்த வெற்றி மூலம் மும்பை 6 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

IPL 2023 SRH vs MI - AWARDS:

  • Player Of The Match: Cameron Green
  • ev Electric Striker Of The Match: Heinrich Klassen
  • Herbalife Active Catch Of The Match: Aiden Markram
  • Visit Saudi Beyond The Boundaries Longest 6: Heinrich Klaasen
  • RuPay On-The-Go 4s: Cameron Green
  • UPSTOX Most Valuable Asset Of The Match: Cameron Green
  • Dream11 Game changer Of The Match: Cameron Green

Latest Slideshows

Leave a Reply