IPL 2024 Captains: ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள் பற்றிய சிறப்பு கண்ணோட்டம்..

IPL 2024 Captains:

ஐ.பி.எல் 2024 சீசன் இன்னும் 8 நாட்களில் தொடங்க உள்ள நிலையில், தொடரில் களமிறங்கும் ஒவ்வொரு அணியின் கேப்டன்களையும் (IPL 2024 Captains) பார்ப்போம். ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் கேப்டனின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும்.

அணியை சிறப்பாக வழிநடத்தி, தந்திரங்களை சரியாக அமைக்கும் அணி வெற்றி பெறும். இதன் மூலம் மும்பை மற்றும் சிஎஸ்கே அணிகள் மட்டுமே இதுவரை 5 முறை கோப்பையை வென்றுள்ளன. இப்போது 10 அணிகளின் கேப்டன் யார், புதிய சீசனில் அவர்களுக்கு என்ன சவால்கள் காத்திருக்கின்றன என்பதைப் பார்ப்போம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)

IPL 2024 Captains: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி விளையாடுகிறார். தோனிக்கு 42 வயது ஆனதால், தொடரின் பாதியிலேயே கேப்டன் பதவியில் இருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படியொரு திட்டம் இல்லை என சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.அணியில் இருக்கும் புதிய வீரர்களை பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பராக வழிநடத்தி அணியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதுதான் தோனிக்கு காத்திருக்கும் ஒரே சவால்.

மும்பை இந்தியன்ஸ் (MI)

IPL 2024 Captains: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத்தில் இருந்து வரும் ஹர்திக் ஏற்கனவே மும்பையில் விளையாடியது பிளஸ் பாயின்ட். ஆனால், ரோகித் சர்மா நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக ஹர்திக் வந்துள்ளதால், அணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அணி வீரர்கள் ஒன்றிணைந்து விளையாடி வெற்றி பெற வேண்டும்.

ஆர்.சி.பி (RCB)

IPL 2024 Captains: ஆர்.சி.பி அணிக்கு டு பிளெசிஸ் மீண்டும் கேப்டனாக இருப்பார். 2022 முதல் ஆர்சிபி கேப்டனாக டுபிளெசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். டு பிளெசிஸ் தலைமையில் 23 ஆட்டங்களில் ஆர்சிபி 12 வெற்றிகளையும் 11 தோல்விகளையும் பெற்றுள்ளது. அணியில் புதிய வீரர்களை வழிநடத்தி பந்துவீச்சு பலத்தை உயர்த்தி முதல் முறையாக கோப்பையை வெல்லும் அழுத்தத்தில் டு பிளெசிஸ் உள்ளார்.

டெல்லி கேபிடல்ஸ் (DC)

IPL 2024 Captains: டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த சீசனில் டேவிட் வார்னர் கேப்டனாக இருந்தார். ஆனால் தற்போது ரிஷப் பண்ட் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். மேலும் அவர் விக்கெட் கீப்பிங் செய்ய முடியும் என NCA அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதன் விளைவாக, இந்த முறை டேவிட் வார்னரிடம் இருந்து பண்ட் கேப்டன் பொறுப்பை ஏற்கிறார். காயத்தில் இருந்து மீண்டு வரும் பண்ட் இவ்வளவு பெரிய பொறுப்பை உடனே கையாள்வாரா என்பது சந்தேகமே.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)

IPL 2024 Captains: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த முறை காயம் காரணமாக பங்கேற்காத அவர், இம்முறை வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வத்துடன் விளையாடி வருகிறார். ஸ்ரேயாஸ் இதுவரை 14 போட்டிகளில் கேகேஆர் அணிக்கு தலைமை தாங்கி, ஆறில் வெற்றியும், ஆறில் தோல்வியும் அடைந்துள்ளார்.

ஆனால், காயம் காரணமாக முதல் சில போட்டிகளுக்கு ஸ்ரேயாஸ் கேப்டனாக இருக்கமாட்டார் என்றும், கடந்த சீசனில் கேப்டனாக இருந்த நிதிஷ் ராணா அணியை வழிநடத்துவார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ராஜஸ்தான் ராயல்ஸ் (RR)

IPL 2024 Captains: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் உள்ளார். அவர் இதுவரை 45 போட்டிகளில் 24 வெற்றிகள் மற்றும் 23 தோல்விகளுடன் தலைமை தாங்கியுள்ளார். அணியில் முக்கியமான வீரர்கள் இருந்தாலும், சில முக்கியமான போட்டிகளில் அந்த அணி சரிந்து தோல்வியை சந்திக்கிறது. இந்த சிக்கலை சரிசெய்வது சஞ்சு சாம்சனின் மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

 பஞ்சாப் (PBKS)

IPL 2024 Captains: பஞ்சாப் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் செயல்படுவார். இதுவரை 12 போட்டிகளில் அணியை வழிநடத்தி 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். இதனால் தனது மோசமான கேப்டன்சி சாதனையை மாற்ற வேண்டிய பொறுப்பு தவானுக்கு உள்ளது.

சன்ரைசர்ஸ் (SRH)

IPL 2024 Captains: சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை 20 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் வாங்கியது. உலகக் கோப்பைக்கு ஆஸ்திரேலியாவுக்கு கேப்டனாக இருந்த பேட் கம்மின்ஸ், அதே உற்சாகத்துடன் மீண்டும் ஐபிஎல்-ல் களமிறங்கியுள்ளார்.

இருப்பினும், சன்ரைசர்ஸ் அணி அவருக்கு புதியது என்பதால், அந்த அணியின் பலம் மற்றும் பலவீனம் என்ன என்பதைக் கண்டுபிடிப்பது பேட் கம்மின்ஸுக்கு சவாலாக இருக்கும்.

லக்னோ (LSG)

IPL 2024 Captains: லக்னோ அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் திரும்புகிறார். கடந்த சீசனில் ராகுல் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார். மீண்டும் கேப்டனாக வந்துள்ள ராகுல், கம்பீரின் ஆதரவு இல்லாமல் அணியை எப்படி வழிநடத்துவார் என்பது சவாலாக உள்ளது.

குஜராத் (GT)

IPL 2024 Captains: குஜராத் அணியின் கேப்டனாக கில் நியமிக்கப்பட்டுள்ளார். நட்சத்திர வீரரான ஹர்திக் பாண்டியா முகமது சமி இல்லாத நிலையில் அவர் எப்படி கேப்டனாக செயல்படப் போகிறார் என்பது தான் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு.

Latest Slideshows

Leave a Reply