IPL 2024 CSK Practice : இன்னும் பத்து நாட்களில் பயிற்சியை தொடங்கும் தல

IPL 2024 CSK Practice :

சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி இன்னும் 10 நாட்களில் பேட்டிங் பயிற்சியை தொடங்குவார் (IPL 2024 CSK Practice) என அந்த அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் மினி ஏலத்தில் சிறப்பாக செயல்பட்ட அணிகளில் சிஎஸ்கேயும் ஒன்று. சிஎஸ்கே தரப்பில் டேரல் மிட்செல் ரூ.14 கோடிக்கும், சமீர் ரிஸ்வி ரூ.8.40 கோடிக்கும், ஷர்துல் தாக்கூர் ரூ.4 கோடிக்கும், முஸ்தபிகுர் ரஹ்மான் ரூ.2 கோடிக்கும், ரச்சின் ரவீந்திரன் ரூ.1.8 கோடிக்கும் வாங்கப்பட்டனர். சிஎஸ்கே அணி நிர்வாகம் மொயீன் அலிக்கு பேக்-அப் வீரர்களையும், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ராயுடு இருவருக்கும் மாற்று வீரர்களையும் வாங்கியது.

இதனிடையே தோனி காலில் அறுவை சிகிச்சை செய்து பூரண குணமடைந்து விட்டாரா? சீசன் முழுவதும் விளையாடுவாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. அதேபோல் தோனி மீண்டும் எப்போது பயிற்சியை தொடங்குவார்? என்ற கேள்வி சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. இந்நிலையில் சென்னையில் உள்ள ஜூனியர் சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பல்வேறு கேள்விகளுக்கு (IPL 2024 CSK Practice) பதிலளித்தார்.

காசி விஸ்வநாதன் :

தோனியின் கடைசி சீசன் இதுதானா? என்ற கேள்விக்கு தோனியால் மட்டுமே பதில் சொல்ல முடியும். அவர் என்ன செய்யப் போகிறார் என்று எங்களிடம் கூறவில்லை. அவர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளார். காயத்திற்குப் பிறகும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருகிறார். அவர் ஏற்கனவே ஜிம்மில் பயிற்சி தொடங்கினார். அடுத்த 10 நாட்களில் பேட்டிங் பயிற்சியையும் தொடங்குவார். ஐபிஎல் தொடர் மார்ச் 22ஆம் தேதி தொடங்கும் என்று கூறப்பட்டது. எனவே சிஎஸ்கே மார்ச் முதல் வாரத்தில் பயிற்சி முகாமை (IPL 2024 CSK Practice) நடத்தவுள்ளது. ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெறும் என்று கூறியுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ஐபிஎல் போட்டி வேறு நாட்டுக்கு மாற்றப்படாது என ஏலத்தின் போது எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஏலத்தைப் பொருத்தவரை எங்கள் திட்டத்தில் டேரல் மிட்செல் மற்றும் முஷ்தாபிகுர் ரஹ்மான் இருவர் மட்டுமே இருந்தனர். “இரண்டையும் வாங்க முடிந்ததால், CSK-க்கு இது சிறந்த ஏலமாக இருந்தது” என்று அவர் கூறினார்.

Latest Slideshows

Leave a Reply