IPL 2024 MI vs RCB: மீண்டும் ஏமாற்றிய மேக்ஸ்வெல்.. டக் அவுட் ஆகி அதிர்ச்சி..
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிளென் மேக்ஸ்வெல் டக் அவுட்டானார். மேக்ஸ்வெல் 2024 ஐபிஎல் தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி மூன்று டக் அவுட்டாக பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளார்.
2023 ஐபிஎல் தொடரில் அதே பெங்களூரு அணிக்காக மேக்ஸ்வெல் நன்றாக பேட்டிங் செய்தார். 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றதில் மேக்ஸ்வெல் முக்கிய பங்கு வகித்தார். குறிப்பாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் காலில் காயத்துடன் தனித்து நின்று இரட்டை சதம் அடித்து தோல்வி அடைய வேண்டிய போட்டியை வெற்றியாக மாற்றினார்.
IPL 2024 MI vs RCB - Glenn Maxwell
உச்சகட்ட பார்மில் இருந்த மேக்ஸ்வெல், 2024 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வைப்பார் என்று அந்த அணியின் ரசிகர்கள் நம்பினர். இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 6 போட்டிகள் விளையாடி குறைவான ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவர் ஒரு போட்டியில் 28 ரன்கள் எடுத்தார். ஐந்து போட்டிகளில் 4 ரன்கள் எடுத்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி 3 ரன்களில் ஆட்டமிழந்தார், அடுத்து வந்த வில் ஜாக்ஸ் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். ரஜத் 50 ரன்களில் ஆட்டமிழந்த பிறகு, மேக்ஸ்வெல் களம் இறங்கினார். களத்தில் இறங்கியவுடன் அவர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி அடித்தார்.
IPL 2024 MI vs RCB - ரஜத் பட்டிதார் :
மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபியின் இளம் வீரர் ரஜத் பட்டிதார் 25 பந்துகளில் அதிரடியாக அரை சதம் அடித்தார். ஆர்சிபி 23 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்நிலையில் இளம் வீரர் ரஜத் பட்டிதார் களமிறங்கினார். இது ஆர்சிபி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பட்டிதார், ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக 5 போட்டிகளில் பெரிதாக விளையாடவில்லை.
இதனால், சமூக வலைதளங்களில் ரஜத் பட்டிதார் கிண்டல் செய்யப்பட்டார். 7 ஓவர்கள் வரை நிதானமாக ஆடிய ரஜத் பட்டிதார் 8வது ஓவரில் இருந்து அதிரடிக்கு திரும்பினார். அதைவிட ஆச்சரியம் என்னவென்றால், அவர் விருப்பப்படி ஷாட்களை ஆடாமல், சரியான கிரிக்கெட் ஷாட்கள் மூலம் பவுண்டரி அடித்தார். ஷ்ரேயாஸ் கோபால் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் பந்துவீச்சில் அடுத்தடுத்து சிக்ஸர்களை அடித்து ரஜத் பட்டிதார் ஆச்சரியப்படுத்தியதால் RCB இன் ஸ்கோர் உயர்ந்தது.
அதன்பின் மும்பை அணியின் கோட்சே வீசிய ஓவரில் தொடர்ந்து 2 சிக்சர்கள் அடித்து 25 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். கோட்சே ஓவரில் மிட் விக்கெட்டுக்கு மேல் சிக்ஸர் அடித்ததைக் கண்டு விராட் கோலி உற்சாகமடைந்தார். ஆனால் பவுன்சரை கணிக்காமல் அடுத்த பந்தை அடிக்க முயன்று ஆட்டமிழந்தார்.
இதனால் அவர் 26 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் உட்பட 50 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், இந்த சீசனில் ஆர்சிபி அணிக்காக அரைசதம் அடித்த 2வது வீரர் என்ற பெருமையையும் ரஜத் பட்டிதார் பெற்றார்.
Latest Slideshows
-
11733 Crore Collection In Bond Registrations : பத்திரப்பதிவுகள் நடப்பு நிதியாண்டில் ரூ.11,733 கோடி ரூபாய் வசூல்
-
Vaa Vaathiyaar Teaser : வா வாத்தியார் படத்தின் டீசர் வெளியீடு
-
Kanguva Review : கங்குவா படத்தின் திரை விமர்சனம்
-
IND Vs SA 3rd T20 : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா வெற்றி
-
Children's Day 2024 : குழந்தைகள் தின வரலாறும் முக்கியத்துவமும்
-
Miss You Teaser : சித்தார்த் நடித்துள்ள 'மிஸ் யூ' படத்தின் டீசர் வெளியீடு
-
Shiva Rajkumar In Thalapathy 69 : தளபதி 69 படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார்
-
ITBP Recruitment 2024 : இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு பிரிவில் 526 பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
ISRO Provide Navigation Signal : மொபைல் போனில் நேவிகேஷன் சிக்னல் வழங்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது
-
அரியலூரில் ரூ1000 கோடி முதலீட்டில் தைவானின் Teen Shoes நிறுவனம்