IPL 2024 Starts In Chepauk : ஐபிஎல் தொடக்க விழா சேப்பாக்கத்தில் ஆரம்பம் - ஏ.ஆர் ரகுமான் இசையுடன் தொடங்குகிறது.

சென்னை :

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடக்க விழாவில் (IPL 2024 Starts In Chepauk ) பங்கேற்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17வது சீசன் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணியை ஆர்சிபி எதிர்கொள்கிறது. இதற்காக சிஎஸ்கே அணியினர் மார்ச் முதல் வாரத்தில் இருந்து பயிற்சி முகாமை தொடங்கியுள்ளனர்.

 ஐபிஎல் தொடரின் இந்த சீசன் சென்னையில் மாபெரும் தொடக்க விழா மூலம் தொடங்க உள்ளது. இதனால் ஐபிஎல் தொடரின் தொடக்க விழாவில் பங்கேற்க 10 அணிகளின் கேப்டன்களும் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகளிர் ஐபிஎல் பிரிமியர் லீக் போலவே இந்த தொடரிலும் நட்சத்திர பிரபலங்களை அழைத்து தொடங்க திட்டமிட்டுள்ளது.

 இந்நிலையில் ஐபிஎல் தொடரின் தொடக்க விழாவில் பங்கேற்கும் நட்சத்திரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. கடந்த முறை பாடகர் அர்ஜித் சிங் பங்கேற்று குஜராத் ரசிகர்களை கொண்டாட்ட மனநிலையில் தள்ளினார். மேலும், இம்முறை சேப்பாக்கம் என்பதால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் :

இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தோனியை வைத்து, நீ சிங்கம் தான் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடினால் எப்படி இருக்கும் என கற்பனைகளை அவிழ்த்துள்ளனர். அதேபோல், இசை நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பாடகர் சோனு நிகமும் பாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பாலிவுட்டின் பிரபல நடிகர்களான டைகர் ஷெராப், அக்ஷய் குமார் ஆகியோர் நடனமாட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் பிரபல பாலிவுட் நடிகைகள் சார்பில் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தொடக்க விழாவை நேரில் காண டிக்கெட் வாங்க ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு குடும்பம் போன்றது என நட்சத்திர கிரிக்கெட் வீரர் சர்துல் தாக்கூர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட சர்துல் தாக்கூர் ரஞ்சி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வருகிறார். சர்துல் தாக்கூர் தமிழக அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சதம் அடித்து மும்பை அணியை காப்பாற்றினார்.

சர்துல் தாக்கூர் :

2018 முதல் 2021 வரை சிஎஸ்கே அணிக்காக விளையாடிய சர்துல் தாக்கூர், 2022ல் டெல்லியிலும், 2023ல் கேகேஆர் அணியிலும் விளையாடினார்.இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்புகிறார் சர்துல் தாக்கூர். சிஎஸ்கே நான்கு கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் வாங்கியது.

இது குறித்து சர்துல் தாக்கூர் கூறுகையில், உண்மையைச் சொல்வதானால், கடந்த ஐபிஎல் தொடர் எனக்கு மோசமாக இருந்தது. இப்போது மீண்டும் தோனியின் கீழ் விளையாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவருடன் விளையாடுவதன் மூலம் நாம் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். அவர் நமக்கு முழு சுதந்திரம் தருவார். கிரிக்கெட்டில் நாம் வளர அவர் வழி வகுப்பார். மீண்டும் சிஎஸ்கே அணியில் இடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனெனில் சிஎஸ்கே ஒரு அணி மட்டுமல்ல, அது ஒரு குடும்பம்.

CSK குடும்ப கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் ஒரு குழு. எனது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு மேம்பட்டதற்கு மும்பை ரஞ்சி பயிற்சியாளரும் ஒரு காரணம். அவர்களுடன் கடுமையாக உழைத்தேன். முஷிர் கான் சிறப்பாக விளையாடினார். ரஞ்சி போட்டியில் இப்படியொரு வீரர் இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக ஷர்துல் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply