IPL Free Streaming On Hotstar : ஐபிஎல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்

IPL Free Streaming On Hotstar :

கிரிக்கெட் போட்டிகளை ஸ்ட்ரீமிங் செய்து வரும் ஹாட்ஸ்டார் APP அதிரடி அறிவிப்பை (IPL Free Streaming On Hotstar) வெளியிட்டுள்ளது. 2024 டி20 உலகக் கோப்பையின் அனைத்து போட்டிகளையும் மொபைலில் இலவசமாக பார்க்கலாம் என அறிவித்துள்ளது. ஜூன் 2 முதல் ஜூன் 29 வரை டி20 உலகக் கோப்பை தொடரை மொபைல் பயனர்களுக்கு முற்றிலும் இலவசமாக ஒளிபரப்ப ஹாட்ஸ்டார் முடிவு (IPL Free Streaming On Hotstar) செய்துள்ளது. முன்னதாக, ஹாட்ஸ்டார் 2023 ODI உலகக் கோப்பை தொடரையும் இலவசமாக ஒளிபரப்பியது. வரும் மார்ச் 22ம் தேதி முதல் ஜியோ சினிமா ஐபிஎல் தொடரை இலவசமாக ஒளிபரப்ப உள்ளது. இதை தொடர்ந்து ஜூன் மாதம் டி20 உலக கோப்பை தொடரை ஹாட்ஸ்டார் நிறுவனம் இலவசமாக ஒளிபரப்புகிறது. எனவே, கிரிக்கெட் ரசிகர்கள் இந்த மூன்று மாதங்களுக்கு தினமும் தங்களது மொபைல் போனில் இலவசமாக கிரிக்கெட் போட்டிகளை கண்டு ரசிக்கலாம்.

ஹாட்ஸ்டார் APP :

ஐபிஎல் தொடரின் உரிமையை ஜியோ சினிமா வாங்கும் வரை, ஹாட்ஸ்டார் செயலி கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்க பணம் செலுத்த வேண்டியிருந்தது. இருப்பினும், ஜியோ சினிமா ஐபிஎல் தொடரை இலவசமாக ஒளிபரப்பியதால் (IPL Free Streaming On Hotstar) அதிகமான ரசிகர்கள் போட்டிகளை நேரடியாகப் பார்த்ததால் ஜியோ சினிமாவும் விளம்பர வருவாயில் பயனடைந்தது. ஹாட்ஸ்டாரும் அதே பாணியை பின்பற்ற ஆரம்பித்துள்ளது. மேலும், ஜியோ சினிமாவை விட ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பு தரம் சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் கருதுவதால் நேரலை பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. பல மொழிகளில் முன்னாள் வீரர்களின் வர்ணனைகள் அதற்கு ஒரு முக்கிய காரணம். ஹாட்ஸ்டாரும் இதே பாதையில் செல்ல முடிவு செய்து கடந்த ஒரு வருடமாக மொபைலில் மட்டும் அனைத்து கிரிக்கெட் தொடர்களையும் இலவசமாக (IPL Free Streaming On Hotstar) ஒளிபரப்பி வருகிறது. தற்போது ரிலையன்ஸ் ஜியோ டிஸ்னி+ ஹாட்ஸ்டாரை அதனுடன் இணைத்துள்ளது. ஆனால், நடைமுறையில் இரு நிறுவனங்களும் இணைய இன்னும் ஒரு வருடம் ஆகும் என்று கூறப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply