IPL Mega Auction For 2025 Begins Today : 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம் இன்று மதியம் தொடங்குகிறது

ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் இன்றும் (நவம்பர் 24-ம் தேதி) மற்றும் நாளை 25-ம் தேதியும் (IPL Mega Auction For 2025 Begins Today) நடைபெறவுள்ளது. இன்று மதியம் சுமார் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த மெகா ஏலத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரலையில் ஒளிபரப்பு செய்கிறது. இந்த மெகா ஏலத்திற்கு சுமார் 1574 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இதில் 574 பேர் கொண்ட வீரர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.      

இந்த பட்டியலில் இந்திய அணிக்காக விளையாடியவர்கள் 48 பேரும், இந்தியாவுக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடிய 193 பேரும், அறிமுகம் செய்யப்படாத 318 பேரும், வெளிநாட்டு வீரர்களில் சர்வதேச போட்டிகளில் விளையாடாத 12 பேரும் உள்ளனர். மேலும் இந்திய நட்சத்திர வீரர்களின் அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

204 வீரர்கள் தேவை

இந்த 2025ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தையொட்டி ஒவ்வொரு அணியும் குறைந்தது 6 வீரர்களை தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் மொத்தம் 46 வீரர்களை (IPL Mega Auction For 2025 Begins Today) தக்கவைத்துள்ளனர். ஐபிஎல் விதிப்படி ஒவ்வொரு அணியும் 25 பேர் கொண்ட அணியை வைத்திருக்கவேண்டும். அந்த வகையில் மொத்தம் 250 வீரர்கள் போட்டியில் பங்கேற்பார்கள். ஏற்கனவே 46 வீரர்கள் தக்கவைக்கப்பட்டு இருப்பதால் இந்த மெகா ஏலத்தில் 204 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர்.

அணிகள் மீதம் வைத்துள்ள தொகை

இந்த 2025ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்திற்கு (IPL Mega Auction For 2025 Begins Today) பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.110.5 கோடியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரூ.83 கோடியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணி ரூ.73 கோடியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரூ.69 கோடியும், குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.70 கோடியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.55 கோடியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.51 கோடியும், மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.45 கோடியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.45 கோடியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.41 கோடியும் மீதம் வைத்திருக்கிறது.

25 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர் (IPL Mega Auction For 2025 Begins Today)

இந்த 2025ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலப்பட்டியலில் நடராஜன், ரவிச்சந்திர அஸ்வின், விஜய் சங்கர், ஜெகதீசன், வாஷிங்டன் சுந்தர், பாபா இந்திரஜித், சித்தார்த், சஞ்சய் யாதவ், முருகன் அஸ்வின், சந்தீப் வாரியர், ஷிவம் சிங், குர்ஜப்னீத் சிங், பிரதோஷ் ரஞ்ஜன் பால், ரித்திக் ஈஸ்வரன், அஜிதேஷ் குருசாமி, முகமது கான், துஷார் ரஹேஜா, ஜாபர் ஜமால், முகமது அலி, லக்சய் ஜெயின், பி.விக்னேஷ் உட்பட 25 தமிழக வீரர்கள் (IPL Mega Auction For 2025 Begins Today) இடம்பெற்றுள்ளனர்.

2025 ஐபிஎல் போட்டி எப்போது தொடங்கும்

2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியானது அடுத்த ஆண்டு மார்ச் 14-ம் தேதி தொடங்குகிறது. மேலும் ஐபிஎல் இறுதி போட்டியானது மே 25-ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply